தீபாவளி பண்ட்கையையொட்டி ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை,செப்.17 (டி.என்.எஸ்) தீபாவளி கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, சிறப்பு ரயில்களை விட்டுள்ள தெற்கு ரயில்வே, தற்போது கூடுதல் இணைப்பு பெட்டிகளை இணைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (எண்: 16714/16713) ரயிலில் முன்பதிவு செய்யக்கூடிய சேர்கார் (2–ம் வகுப்பு இருக்கை) பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று (16–ந்தேதி) முதல் 31–ந் தேதி வரையிலும், எழும்பூரில் இருந்து 19–ந் தேதி முதல் நவம்பர் 3–ந் தேதி வரையிலும் தற்காலிகமாக கூடுதல் பெட்டி இணைக்கப்படும்.

எழும்பூர் – திருவனந்தபுரம் – எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (எண்: 16723 / 16724) ரயிலில் முன்பதிவு சேர்கார் (2–ம் வகுப்பு இருக்கை) பெட்டி ஒன்று தற்காலிகமாக கூடுதலாக இணைக்கப்படும். எழும்பூரில் இருந்து இன்று (17–ந் தேதி) முதல் நவம்பர் 1–ந் தேதி வரையிலும் திருவனந்தபுரத்தில் இருந்து நாளை (18–ந் தேதி) முதல் நவம்பர் 2–ந் தேதி வரையிலும் கூடுதலாக இந்த பெட்டி சேர்க்கப்படும்.

எழும்பூர் – குருவாயூர் எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்: 16127 / 16128) ரயிலில் தற்காலிகமாக ஏ.சி 3 அடுக்கு படுக்கை வசதி பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து இன்று (17–ந் தேதி) முதல் டிசம்பர் மாதம் 12–ந் தேதி வரையிலும், குருவாயூரில் இருந்து 18–ந் தேதி முதல் டிசம்பர் 16–ந் தேதி வரையிலும் இணைக்கப்படும்.

மேலும் இரண்டு சிறப்பு ரயில்களும் விடப்பட்டுள்ளது. ரயில் எண்: 06598 யஷ்வந்த்பூர் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் யஷ்வந்த்பூரில் 25–ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் பகல் 2.30 மணிக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலியில் நின்று செல்லும்.

ரயில் எண்: 06599 நாகர்கோவில் – யஷ்வந்த்பூர் இடையேயான சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து 26–ந் தேதி மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு யஷ்வந்த்பூருக்கு மறுநாள் காலை 8 மணிக்கு சேரும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Response