தேசியத்தலைவர் பிறந்தநாள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய நாம்தமிழர்கட்சி

நவம்பர் 24 ஆம் தேதி இரவு தேசியத்தலைவர் பிறந்தநாள் சுவரொட்டிகள் கிழிப்பு மற்றும்  பதாகைகள் அகற்றம் செய்த காவல்துறையினரைச் சந்தித்து நியாயம் கேட்கச் சென்றபோது, நீங்கள் அனுமதியில்லாமல் வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னார்களாம். இப்போதே அனுமதி கேட்டுக் கடிதம் கொடுக்கிறோம் என்று சொன்னதும் அவ்வாறு அனுமதி கேட்டால் உங்களைக் கைது செய்வேன் என்று மிரட்டிய  ஈரோடு டி எஸ் பி
யின் ஆணவப்பேச்சுக்குக் கண்டணம் தெரிவித்ததால்  “நாம் தமிழர்” கட்சியினரைக்  கைது செய்து நாள் முழுவதும் வைத்திருந்துவிட்டு இரவு விடுதலை செய்திருக்கிறார்கள்.  அவர்களில்

விஜயகுமார் மற்றும் சரவணன் ஆகியோர் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

இவ்வளவு சோதனைகளுக்குப் பிறகும் இன்று காலை ஈரோடையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உணவு வழங்கிக் கொண்டாடியிருக்கிறார்கள்.

அதன்பின்னர் பன்னீர்செல்வம் பூங்கா அருகில் இனிப்பு வழங்கியபோது அதைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனுப்பிவிட்டார்களாம். எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்வோம் என்று நாம்தமிழர் கட்சியினர் சொல்கின்றனர்.

Leave a Response