தமிழ்நாடு காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?

தமிழினத்தலைவர் அற்பதாவது பிறந்தநாள் வாழ்த்துச் சுவரொட்டிகளை தமிழகம் முழுவதும் ஒட்டி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் இதைக் கண்டுகொள்ளாத காவல்துறை. இந்த ஆண்டு, திடீரென தேடித்தேடி சுவரொட்டிகளைக் கிழிப்பது, சுவரொட்டிகளைப் பறித்துச் செல்வது, பதாகைகளை அகற்றுவது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்.

சு.சாமியும். எச்.ராஜாவும் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தடை செய்யவேண்டும் என்று பேசியபிறகு இந்த வேலைகள் நடக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

நவம்பர் 24 அன்று இரவு, ஈரோட்டில் நாம்தமிழர்கட்சியினர் பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துப் பதாகை வைத்துவிட்டு சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த காவல்துறை, அவற்றைப் பறித்துச் சென்றதோடு பதாகை வைத்தவர்களைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனராம். அதன்பின் நாம்தமிழர்கட்சியினர் திரண்டு சென்றதும் கட்சியினரை விட்டுவிட்டனராம்.

இதுபற்றி. நாம்தமிழர்கட்சியைச் சேர்ந்த லோகு கூறியதாவது,

இரவு சுவரொட்டி ஒட்டும்பொழுது காவல் துறையினர் வந்து சுவரொட்டியை வாங்கி சென்று விட்டார்கள்.இதே போல எம்.ஜி.ஆர் சிலையருகே வைத்திருந்த தலைவர் படம் போட்ட பதாகையையும் எடுத்து சென்றுவிட்டார்கள் நாங்கள் நகரகாவல் நிலையம் சென்று கேட்ட போது ஜான்பீட்டர்  என்கிற உதவிஆய்வாளர்,தடைசெய்யப்பட்ட இயக்கத்தை பற்றியும் அதன் தலைவர் படத்தையும் போடக்கூடாது என எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது இது மத்திய அரசு உத்தரவு என்று சொன்னதாகச் சொல்கிறார்.

அப்படியானால் தமிழ்நாடு காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்ற கேள்வி வருகிறது.

 

 

Leave a Response