குஜராத்தை வீழ்த்தியது சென்னை – முத்திரை பதித்த வெற்றி

2023 ஐபிஎல் கிரிக்கெட் கோப்பைக்கான இறுதிப் போட்டி
குஜராத் தலைநகர் அகமதாபாத் நரேந்திரர் கிரிக்கெட் ஆடுகளத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

பூவா தலையா வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி
20 ஓவரில் 214 ஓட்டங்களைக் குவித்தது.

ஆட்டம் தொடங்கிய சற்று நேரத்தில் சுப்மன் கில் கொடுத்த பிடியை தீபக் சாகர் தவற விட்டார்.
ஆனால் அவர் 39 ஓட்டங்கள் எடுத்து இருந்த பொழுது,
ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் மின்னல் வேகத்தில் தோனி குச்சிகளை வீழ்த்தி ஆட்டம் இழக்கச் செய்தார்.
அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை.
அதேபோல் விருத்திமான் சாகா கொடுத்த பிடியையும் தோனி தவற விடவில்லை.

ஆனாலும், சென்னையைச் சேர்ந்த சாய் சுதர்சன் 96 ஓட்டங்கள் குவித்தார்.
விருத்திமான் சாகா 54
சுப்மன் கில் 39.

அடுத்து சென்னை அணி ஆடத் தொடங்கியது.

நான்கு பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் பலத்த மழை பொழிந்தது.
சுமார் ஒரு மணி நேரம் ஆட்டம் தடைப்பட்டது.

அதன் பிறகு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி
ஐந்து ஓவர்கள் குறைக்கப்பட்டது. சென்னை அணியின் வெற்றிக்கு
171 ஓட்டங்கள் இலக்கு என நடுவர்கள் தீர்மானித்தனர்.

சென்னை அணி 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் குவித்து வென்றது.

டெவான் கான்வே 47 ஓட்டங்கள்.
சிவம் துபே 32
ரகானே 27.

மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர் கடைசிப் பந்தில் நான்கு ஓட்டங்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார் ரவீந்திர ஜடேஜா.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த சென்னை அணி,
ஐந்தாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.
இது முத்திரை பதித்த வெற்றி.

– அருணகிரி

Leave a Response