
இலண்டனில் உள்ளதமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் வீரத்தமிழர் முன்னணி ஈடுபட்டுவருகிறது. வருகிற தமிழர்திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. அதற்கு அழைப்பு விடுத்து அவ்வமைப்பினர் வெளியிட்டிருக்கும் கடிதம்…
உலகெங்கும் பரவி வாழ்கின்ற எமது உயிருக்கு நிகரான தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
நம்மை அடிமைப்படுத்த நினைத்த சக்திகள் நமது மொழி மற்றும் பண்பாட்டு சிதைவுகளை நாளொரு வண்ணமாக நம்மில் நிகழ்த்தி வருகிறது. எனவே இவைகளில் இருந்து நாம் நமது கலைகளை மீட்டெடுக்கவும், காக்கவும், ஏற்க்கனவே இழந்து விட்ட நமது பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்வதும் காலத்தின் அவசியமாகிறது.
இன்று நாமிருக்கும் கால கட்டத்தில், அசுரவேகமான இயந்திர வாழ்கையில் நம்மக்களை இந்த கண்ணோட்டத்தில் சிந்திக்கவைப்பதே சிரமமானது. ஆகவே ஒத்த சிந்தனை கொண்ட நண்பர்கள் மற்றும் தமிழ்க் குடும்பங்கள் லண்டனிலும் அதற்கு அருகாமை நகரங்களில் இருந்தும் இணைந்து உருவாக்கியதே வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய ராச்சியம்.
1) நம் தமிழ்க் குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய கலாச்சார விழுமியங்களைப் படிப்பித்து, இளமையிலேயே அவர்களுக்கு தமிழ் உணர்வு மற்றும் பெருமைமிக்க தமிழர் பண்பாட்டு அறிவோடு வளர்த்தெடுப்பது.
2) இங்கிலாந்தில் உள்ள அனைத்து தமிழர்களையும் மொழியின் அடிப்படையில் ஒருங்கிணைத்து நம் இனத்தின் வரலாற்று பெருமைகளையும் மொழியின் மேன்மையையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வது.
3) தாய்த்தமிழகத்திலும் இலங்கையில் வாழும் நமது தமிழ் உறவுகளுக்கும் பொருளாதார அடிப்படையில் உதவிகளை மேற்க்கொள்வது.
இந்த கொள்கைகளை வைத்து நகரும் லண்டன் வீரத்தமிழர் முன்னணி வரும் தைத்திங்கள் இரண்டாம் நாள் தை 2 (16-01-2016) நாள் பொங்கலை வெகுவிமரிசையாக கொண்டாடும் பொருட்டு “தமிழர் திருநாள் மாபெரும் பொங்கல் விழா” இலண்டன் மாநகரில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் நாம் வாழும் இடங்களில் காலம் காலமாக நடைபெறும் ஊர்கூடி பொங்கல் வைக்கும் நிகழ்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு Roselyn Cottage 3 Croydon Lane Banstead SM7 3AS என்ற இடத்தில் நடைபெறும். அது மட்டுமல்லாது கலை நிகழ்ச்சி மற்றும் குழந்தைகளை நம் கலாச்சாரம் சம்பந்தமாக ஊக்குவிக்கும் பொருட்டும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


