இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – மக்கள் கண்ணீர்

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டி விட்டது. டீசல் விலையும் இராஜஸ்தான் உள்ளிட்ட சில இடங்களில் ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும் என்பதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வை அரசு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றன்ர்.

இந்த நிலையில், இன்றைய (ஜூலை 04) பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் 19 காசுகளும் அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 100.13 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று 100.44 ரூபாய்க்கும், டீசல் 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் எளியமக்கள் க்ண்ணீர் விடுகிறார்க்ள்.

Leave a Response