கதறும் கலைஞர் தொலைக்காட்சி ஊழியர்கள் – கவனிப்பாரா மு.க.ஸ்டாலின்?

முதலமைச்சராகப் பொறுப்பேற்காத நிலையிலும் கொரோனா தடுப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார் மு.க.ஸ்டாலின்.

அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமுனைப்புடன் நடைபெற்றிட வலியுறுத்தினேன் என்று அவரே கூறியுள்ளார்.

அதோடு,மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளர்.

பாராட்டுக்குரிய செயலை அவர் செய்யும் அதே நேரத்தில், இதே கொரோனா சிக்கலால்,அவர்களுடைய கலைஞர் தொலைக்காட்சி ஊழியர்கள் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

அத்தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.

அலுவலகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை என்பதாலேயே இவ்வளவு பாதிப்புகள் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே 30 முதல் 40 விழுக்காடு சம்பளப் பிடித்தம் செய்திருப்பதால் பாதிக்கப்பட்டிருக்கும் அத்தொலைக்காட்சி ஊழியர்கள் இப்போது கொரோனா சிக்கல் அச்சத்திலும் இருக்கிறார்களாம்.

நாட்டைக் காக்க முழு முனைப்புடன் செயலாற்றும் மு.க.ஸ்டாலின் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் துயர் துடைத்தால் நல்லது என்கின்றனர்.செய்வார் என்றும் நம்புகின்றனர்.

நல்லது நடந்தால் நல்லது.

Leave a Response