அகதிகள் முகாமில் வாடி வரும் சொந்தங்களின் பசியாற்றுவோம் – கொளத்தூர் மணி வேண்டுகோள்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள வேண்டுகோள்…..

அன்புடையீர் வணக்கம்.

ஈழச்சொந்தங்களுக்கு உதவுங்கள்.

“இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள”

கும்மிடிபூண்டி, புழல் ஆகிய இடங்களில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் வாடி வரும் சொந்தங்களின் பசியாற்றுவதற்கான வேண்டுகோளை முன்வைக்கிறோம்.

தங்களின் நாட்டிற்கும் செல்ல இயலாமல், முகாமில் வாழும் மக்கள் இந்திய, தமிழக அரசினால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் சூழலில் பேரிடியாக வந்த கொரோனா தொற்றால் மேலும் நிலைகுலைந்துள்ளனர்.
80 சதத்திற்கு மேலானவர்கள் தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்களாக இருப்பதாலும், கடந்த 36 நாட்களுக்கு மேலாக வருமானமில்லாத தாலும் அவர்களின் மிகவும் இக்கட்டான சூழலை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி முகாமில் பதிவு செய்யப்பட்ட 900 குடும்பங்களும், பதிவு செய்யப்படாமல் 170 குடும்பங்களும்,
புழல் முகாமில் பதிவு செய்யப்பட்ட 215 குடும்பங்களும், பதிவு செய்யப்படாமல் 125 குடும்பங்களும் இருக்கின்றன.

பதிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டைக்கு உள்ள பொருட்களை அரசு கொடுத்தாலும் அது முழுமையாக பற்றாததும், காய்கறிகள் வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தாலும் சொல்லொண்ணா அவலத்தை அனுபவித்து வருகின்றனர்.

அரசால் அவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகையும் கடந்த 25 ஆண்டுகளாக மாற்றமில்லாமல் சொற்பத்தொகையாகவே இருந்து வருகிறது. பதிவு செய்யப்படாத குடும்பங்களுக்கு அரசின் எந்த உதவியும் கிட்டவில்லை. பதிவு செய்யப்பட்ட குடும்பங்களிலும் எண்ணிக்கை அதிகம் உள்ள குடும்பங்கள் அரைவயிற்றோடு காலம் தள்ளும் சூழ்நிலையே நிலவுகிறது.

அடுத்த இரண்டு வாரங்களுக்கான உதவியாக, பதிவு செய்யப்படாத 295 குடும்பங்களுக்கு தலா 1500 மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். இந்த உதவியை வழங்குவதற்கான மொத்தத் தொகை 4,42,500 ரூபாயை திரட்டுவதை இலக்காக கொண்டுள்ளோம்.

இந்தச் சூழலின் நெருக்கடி கருதி அன்புள்ளம் கொண்டவர்கள் தாமதிக்காமலும், அதே சமயம் தொகையை சற்றே பெரிதாகவும் வழங்கி ஈழச்சொந்தங்களின் பசியினை ஆற்றிடுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.”
PURATCHI PERIYAR MUZHAKAM,
Karur Vysya Bank,
Adyar Branch,
Current Acct No.: 1257115000002041
IFSC : KVBL0001257

Google pay +91 94433 59666 – puratchi periyar muzhakam.

நன்கொடை அனுப்புவோர் தங்கள் பெயர், முகவரி, அனுப்பிய தொகை ஆகிய விவரங்களை ‘நன்கொடை’ என்ற தலைப்பிட்டு, கீழ்க்கண்ட பகிரி எண்களுக்கு அனுப்பி வையுங்கள்.
1. +91 93447 64865
2. +91 76677 66660
3. +91 90038 67311
4. +91 98846 72340
உங்கள் நன்கொடை, அது பயன்படுத்தப்பட்ட விவரங்கள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ ‘@dvk12’ என்ற முகநூல் வழியே அறியத் தருவோம்.

அன்புடன்,
கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

புகழூர் ந.விசுவநாதன், காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கம்.

பேரா. மணிவண்ணன் , சென்னை பல்கலைக்கழகம்.

அருட்பணியாளர் சு. ஆன்றனி கிளாரட், தாமஸ் கொச்சேரி மீன் தொழிலாளர் யூனியன்.

ரகு, அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கம்.

இவ்வாறு அவருடைய வேண்டுகோள் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response