5 மாநில தேர்தலில் பாஜக தோல்வியின் விளைவு பெட்ரோல் விலை உயர்ந்தது

கடந்த இரண்டு மாதங்களாக மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் உச்சத்தில் இருந்தன.

அதனால், கடந்த 57 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வந்தன. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 86 ரூபாய் 10 காசுகளாக இருந்தன. இதன் பின்பும் பெட்ரோல் விலை உயர்ந்தால் என்ன செய்வதென்று வாகன ஓட்டிகள் தவித்த நிலையில் பெட்ரோல் விலை சரிவு காண ஆரம்பித்தது. அன்றிலிருந்து சரிய ஆரம்பித்த பெட்ரோல் விலை நேற்று வரையிலும் தொடர்ந்து விலை இறங்கு முகத்திலேயே இருந்தது.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 72 ரூபாய் 82 காசுகளாக இருந்தது. இன்று ஒருலிட்டர் 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94 காசுகளாக விற்கப்பட்டுகிறது. இத்தனை நாளை இருந்த விலை சரிவு 5 மாநில தேர்தலுக்காகவே என பல அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.

ஏனென்றால் கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தொடர்ந்து 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை சரிவு கண்டது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தை இந்திய மக்கள் கண்டனர்.

அதேபோன்று தான் தற்போது 57 நாட்களாக குறைந்து வந்த பெட்ரோல் விலை, தேர்தல் முடிவுகள் எல்லாம் வெளிவந்து தேர்தல் அலை ஓய்ந்தவுடன் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் இனி மேலும், மேலும் உயர்ந்து நாடாளுமன்ற தேர்தல் அலை வரும் போது தான் குறையுமோ என வாகன ஓட்டிகள் அய்யம் கொண்டுள்ளனர். இனி வரும் நாட்களில் அது தெரியவரும். அதேசமயம் விலையேற்றத்தை குறிப்பிட்டு கூறுபவர்கள் விலை குறையும்போது கூறுவதில்லை என பாஜகவினர் தெரிவித்து வந்தனர்.

ஆனால் விலை குறைவு என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் எப்படி சாத்தியப்படுகிறது என்பதும் அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் தாமாகவே விலையை உயர்த்துகின்றன அதில் அரசாங்கம் தலையிட முடியாது என்பது அப்பட்டமான பொய் என்று இதன்மூலம் தெரிவதாகச் சொல்கின்றனர்.

Leave a Response