
பிக் பாஸில் சிநேகனை பலர் பாராட்டி இருந்தார்கள். சிநேகனை குறை சொல்பவர்கள், திட்டுபவர்களை கூட அவர் பெண்களை கட்டிபிடிப்பதை வைத்து திட்டுகிறார்கள் என்றே குறுகிய மனப்பான்மையை ஒரு வட்டத்தில் சுருக்கி இருந்தனர்.
சிநேகன் இதுவரை செய்தது பரணியை வெளியே அனுப்பே முக்கிய காரணமாய் இருந்தார். கஞ்சா கருப்பு வெளியே போனபோது நேர்மையானவங்களை வெளியே தான் அனுப்புவிங்களா கேட்டார். காயத்ரியின் பேச்சை கேட்டு இவரும் முக்கியமாய் பரணியை தனிமைபடுத்தினார். பரணி மேல ஏறி குதிக்க முற்படும்போது ஒரு சிலர் எழுந்து பார்க்க போனார்கள் அனைவரையும் அவரவர் இடங்களில் உட்காருங்கள் என்று அழுத்தி சொன்னவர் சிநேகன்.
நமீதா பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது ஓவியா இருந்தால் நாங்கள் யாரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கமாட்டோம்ன்னு சக்தியுடன் போய் கம்ப்ளைன்ட் செய்தார். ஓவியா வெளியே போகவில்லை என்றால் யாரும் வேலை செய்யமாட்டோம்ன்னு பரணிக்கும் இவர் தான் சொன்னார், அதே போல ஓவியாவுக்கும் ஒரு முறை சொன்னார்.
இதே சிநேகன் பிக பாஸ் வீட்டின் முதல் நாளே ஜூலி “இங்க வந்து எல்லாம் தெரிஞ்சே போல பேசுதுன்னு” நம்ம எல்லாம் பிரபலமானவங்க” நம்ம ஸ்டேட்ஸ் வேறன்னு சொன்னாரு, இன்னொரு நாள் ஜல்லிக்கட்டு பத்தி நான் இன்னும் ஜூலிகிட்ட பேசல பேசுனா அவள் தூக்கு போட்டு தொங்கிடுவான்னு சக்தியிடம் புறம் பேசினார். வையாபுரி புறம்பேசிகொண்டே இருக்காருன்னு நாமினேட் பண்ணாரு, நமீதாவின் ட்ரெஸ் அவிழ்ந்து கிழே விழுமான்னு சிரிச்சு பேசினார், பேசிட்டு அடுத்த நாளே பரணி இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லன்னு பிக் பாஸ்கிட்ட சொல்லுங்கன்னு சொன்னதும் சிநேகன் தான், கடந்த வாரம் சனிக்கிழமை ஓவியாவை எப்போதும் காப்பாற்றுவது பிக் பாஸ், விஜய் டிவி சேனலுமாம் மக்கள் கிடையாதுன்னு சொன்னதும் சிநேகன் தான்,ஓவியாவை சமாதானபடுத்திட்டு, ஓவியாவை பத்தி எல்லா ரகசியமும் தெரியும்ன்னு காயத்ரிகிட்ட வந்து சொல்வதுன்னு மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருந்தார். நேற்று கூட அவள் (ஓவியா) கெட்டவளா இருந்தாலும் அதுக்கு நாமும் காரணம் ஆயிட்டோமோன்னு சக்தியிடம் பீல் பண்ணுகிறார். சக்தி, காயத்ரியிடம் மட்டும் இன்னும் ஓவியாவை கெட்டவள்ன்னு சொல்லியே ஸ்கோர் செய்ய முயல்கிறார்.
சிநேகன் மீது நல்ல இமேஜ் வர ஆரம்பித்தது ஓவியா நீங்க தலைவரான்னு திட்டியும் , அவள் மழையில் நனைந்து தூங்குவது தாங்காமல் பேச முற்பட்டதில் தொடங்கி, ஆரவுடன் பேச ஏற்பாடு செய்து ஓவியாவுக்கு ஆறுதலாய் இருந்ததில் இமேஜ் உயர ஆரம்பித்தது. சிநேகன் ஓவியா அன்புக்காக ஏங்குகிறாள் என்று புரிந்த உடன் அந்த குற்ற உணர்ச்சியில் தான் அவர் கடந்த வாரம் நல்ல மனிதனாய் நடந்துகொண்டார். ஓவியாவை புரிந்து கொள்ள முயன்ற சிநேகன் பரணியை புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லையே. யாரோ சொன்னதை கேட்டே இவரும் பரணியை ஒதுக்கி தள்ளினாரே? நேற்று முழுக்க ஓவியாவை நினைத்து அழுதது அவரும் இந்த மதிகெட்டான் கூட்டத்துடன் சேர்ந்து ஓவியாவை தனிமைபடுத்தியதை உணர்ந்ததாலே அவரோட குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவர அழுது தீர்த்து வடிகால் தேடுகிறார். சிநேகன் ஓவியா விஷயத்தில் உணர்ந்ததை பரணி விஷயத்திலும் உணர வேண்டும். இனிமேலாவது புறணி பேசுவதை குறைத்து அங்கே இருப்பதில் பெரிய மனிதனாய் நடந்து கொள்ள வேண்டும்.


