ஐங்கரநேசன் பதவி இழந்தது தமிழ்மண்ணுக்கே பெரும் பாதிப்பு – தீபச்செல்வன் வேதனை

அண்மையில் வடமாகாண அரசில் நடந்த குழப்பங்கள் காரணமாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகினார். அதையொட்டி எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள முகநூல் பதிவில்,

வடக்கு மாகாண அமைச்சராக இருந்த ஐங்கரநேசன், முன்னெடுத்த சிறந்த திட்டங்களில் ஒன்று அம்மாச்சி உணவகம் – வடக்கின் பாரம்பரிய உணவகம். ஓராண்டுக்கு முன்னர் முதன் முதலாக முல்லைத்தீவில் அம்மாச்சி உணவகம் திறக்கப்பட்டபோது எடுத்த படங்கள் இவை.

முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றிய நினைவுகள். கார்த்திகைப் பூக்களைச் சூடியபடி கார்த்திகை மாத மரநடுகைத் திட்டத்தையும் முன்னெடுத்த ஐங்கரநேசன், சீரியதொரு சூழலியளானும் தமிழ்த் தேசியவாதியும். வடக்கு கிழக்கின் மண்ணுக்கு மிகவும் உகந்த ஒரு விவசாய அமைச்சர். அவர் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட செயல் களை விளைந்த எங்கள் மண்ணுக்கே பெரும் பாதிப்பு.

Leave a Response