“ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும்” ; ஜோதிகா


‘36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகளிர் மட்டும்’.. இந்தப்படத்தில் ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என மூன்றும் இன்னும் மூன்று கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ளார்..

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஜோதிகா, பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.. அதை அவருடைய பேச்சில் இருந்தே கேட்போமே..

“உங்களுடைய படங்களில் பெண்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். அம்மா, தங்கச்சி, மனைவி என உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களின் கதாபாத்திரங்களை படங்களின் நாயகிக்கு கொடுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களைப் போன்று நாயகிக்கு உடைகள் கொடுக்க முடியாது என தெரியும்.

தயவு செய்து கொஞ்சம் அறிவாளித்தனமான கதாபாத்திரங்கள் கொடுங்கள். காமெடியன் அருகில் நிற்க வைத்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைக்காதீர்கள். மிக கேவலமான அறிமுக காட்சியை கொடுக்காதீர்கள். படங்களில் நாயகி ஒருவர் நாயகன் பின்னால் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லிக் கொண்டே திரிவதை நிறுத்துங்கள்.

ஒரு நாயகனுக்கு 4 நாயகிகள் வைத்தீர்கள் என்றால், இளைஞர்களும் நம்மளும் 4 காதலிகள் வைத்துக் கொள்ளலாம் என எண்ணுவார்கள். படத்தில் ஒரு நாயகனுக்கு ஒரு நாயகி போதும். இந்தியாவில் இருக்கும் பெண்களுக்காக சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Response