
ரூபாய் நோட்டுக்களில் மற்றம் கொண்டுவந்து நமது பிரதமர் மோடி அறிவித்த திட்டம் வரவேற்புக்குரியது என்றாலும், அதன் சாதக, பாதகங்களை பொறுத்து இருவிதமான கருத்துக்கள் உலாவத்தான் செய்கின்றன.. நடிகர் விஜய்யும் தனது பங்கிற்கு இந்த திட்டத்தை வரவேற்றுள்ளதோடு இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சாதாரண ஏழை மக்கள் இந்த திடீர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.. அதை தவிர்க்கும் விதமாக இதை செயல்படுத்தி இருக்கலாம் என்பதுதான் அவரது எண்ணம். மேலும், நாட்டில் உள்ள மக்களில் 20 சதவீதம் மட்டுமே உள்ள பணக்காரர்களில், அதிலும் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே கருப்பு பணம் பதுக்குபவர்களை டார்கெட் பண்ணுவதற்காக 80 சதவீத மக்களுக்கு சிரமம் தந்திருக்கவேண்டாம் என்றும் கூறியுள்ளார் விஜய்..


