
நூறு நாள் மற்றும் வெள்ளிவிழா படங்கள் பலவற்றுக்கு சொந்தக்காரர் தான் நடிகர் சரத்குமார்.. ஒருகட்டத்தில் ஹீரோ என்கிற அந்தஸ்தில் இருந்து மாறி, குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.. ஆனால் அதன்பின் அரசியல், நடிகர் சங்க விவகாரம் என பிஸியாக இருந்ததால் நடிப்பிலிருந்து விலகியது போல ஒரு தோற்றம் உருவானது.. அது எதனால் என்பதை அவரே கூறுகிறார்.. அதையும் தான் கேட்போமே..
“வாழ்க்கையில் உயரவும் தாழ்வும் சகஜமானதுதான் .அது எல்லோருக்கும் ஏற்படும். சைக்கிளில் இரு பெடல் மாதிரி ஒன்று மேலே வரும்போது மற்றொன்று கீழே இறங்கிதான் ஆகும். ஆனால் நான் அந்த சைக்கிளை தொடர்ந்து ஓட்டாமல் திடீர் என்று கீழே இறங்கிவிட்டேன். அதை இப்போது உணர்கிறேன்.
இப்போது ஜி.வி.பிரகாசும் நானும் இணைந்து ‘அடங்காதே’ என்கிற படத்தில் நண்பர்களாக நடிக்கிறோம். சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். இதேபோல் கன்னடத்தில் நடிகர் புனித்ராஜ்குமாரும் நானும் இணைந்து ராஜகுமாரா என்றபடத்தில் நடிக்கிறோம். இந்தப்படம் முடிந்து விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இன்னும் இரண்டு படங்களில் நடிக்க கதை கேட்டுவருகிறேன். இனி தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தப்போகிறேன்” என கூறியுள்ளார் சரத்குமார்.


