சு.சாமி ஒரு சாவுக்குருவி, தொட்ட இடம் துலங்காது-பழ.நெடுமாறன் காட்டம்


தேசியத்தலைவரின் அறுபதாம்அகவையையொட்டி நடந்த நிகழ்வில் சுப்பிரமணிசாமியைப் பற்றிக் கடுமையான சொற்களைச் சொன்னார் பழ.நெடுமாறன். இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட்டு அவர் பேசியதன் ஒரு பகுதி….

விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்தவரை இலங்கையில் காலூன்றி எந்த அன்னிய வல்லரசாலும் முடியவில்லை. புலிகள் தங்கள் மண்ணின் பெரும்பகுதியை மீட்டுத் தனி அரசு நடத்தியபோது, இந்தியா முன்வந்து இதை அங்கீகரித்திருக்குமானால் சீனாவோ பாகிஸ்தானோ இலங்கையில் காலூன்றியிருக்க முடியாது.
ராஜபக்சேவிடம் இந்தியா ஏமாந்தது. இதன் விளைவாக சீனா, இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்துமாக்கடல் ஆதிக்கத்தையும் தன்வசம் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
இந்துமாக்கடலில் சீ£னவின் ஆதிக்கத்தையும் இலங்கையில் சீனா காலூன்றி இருப்பதால் இந்தியா எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தையும் தடுத்து நிறுத்த ஒரேவழி தமிழீழம் அமைவதுதான். இதற்கு இந்தியா முன்வந்தாலொழிய சீன ஆபத்திலிருந்து இந்தியா தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.
கடந்தகாலங்களில் சிங்களஇன்வெறி அரசுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தன. பொருளாதார உதவிகளைச் செய்தன. இது தவறானது என்பதை அந்நாடுகள் இப்போது உணர்ந்துவிட்டன.
கடந்த காங்கிரசு அரசு ஐநா விசாரணைக்குழு இந்தியாவில் விசாசரணை நடத்த அனுமதிக்க மறுத்தது. இந்தத் தவறைத் திருத்த பிரதமர் மோடி முன்வரவேண்டும். ஐநா விசாரணைக்குழு இந்தியாவில் விசாரணை நடத்த அனுமதிக்கவேண்டும்.
ஐரோபபாவில் இருந்த சிறிய நாடுகளை இட்லர் ஆக்கிரமித்தபோது, பிரிட்டீஷ் அரசு அதைக் கண்டிக்கவில்லை. இட்லரை தாஜா செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. இதே தவறை காங்கிரசு அரசும் செய்தது. தென்னாசியாவின் இட்லராக உருவாகியிருக்கும் ராஜபட்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிப்பதன் மூலமே இந்தியா எதிர்நோக்கியிருக்கும் ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். மோடி அரசு இதை எவ்வளவு விரைவாக உணருகிறதோ அந்தஅளவுக்கு நல்லது.
இல்லையெனில், எம்கே.நாராயணன்களையும் சிவசங்கரமேனன்களையும் நம்பிச் செயல்பட்ட காங்கிரசு அரசுக்கு ஏற்பட்ட கதி, சுப்பிரமணியசாமிகளையும் சேசாத்திரிசாரிகளையும் நம்பினால் பாசக அரசுக்கும் ஏற்படும். இதை பிரதமர்மோடி உணரவேண்டும்.
சுப்பிரமணியசாமி ஒரு சாவுக்குருவி, தொட்டஇடம் துலங்காது அவரை நம்பியவர்கள் நட்டாற்றில் விடப்படுவார்கள்.

Leave a Response