முதல்வரின் அடாத செயல் – மக்கள் அவதி

தமிழ்நாட்டிற்கு ​தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில்,அரசுமுறைப் பயணமாக,முதலமைச்சர் விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், துபாய் வழியாக இலண்டன் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில்,பழைய விமானநிலையம் நுழைவாயில் எண் 6 வழியாக குடியரசுத்தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர்,ஆளுநர், முதலமைச்சர்கள் மற்றும் இசெட் ப்ளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் உள்ளவர்கள்,வாயில் எண்:6 வழியாக உள்ளே செல்லலாம்.

அதற்கு சென்னை விமானநிலையத்தில் உள்ள பீயுரோ ஆப் சிவில் ஏவியேசன் எனப்படும் பிசிஏஎஸ் அலுவலகத்தில்,முன்னதாகவே முறையாக அனுமதி வாங்கவேண்டும்.

அனுமதி உள்ளவர்கள் மட்டும் வாயில் எண் 6 மூலம், நேரடியாகச் செல்லும் சிறப்புப் பாதுகாப்பு அனுமதி நடைமுறையில் உள்ளது.

ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைக் வகுத்துள்ளது. ​

இந்நிலையில்இந்தப் பயணத்தில்,முதல்வருடன் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது நெருங்கிய நண்பர் விஷ்ணுரெட்டியும்,6 ஆம் எண் நுழைவாயிலைப் பயன்படுத்த திட்டமிட்டிருந்தார்.
எனினும்,அரசு நெறிமுறைகளின்படி முதல்வருடன் நுழைவாயிலில் செல்ல,அவருக்கு அனுமதி இல்லை என்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிசிஏஎஸ் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

முதல்வர் அலுவலகத்திலிருந்து, விடுக்கப்பட்ட கோரிக்கைகளும்,பாதுகாப்பு விதிகளைக் காரணம் காட்டி,அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில்,நண்பருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தான்மட்டும் அந்த வாயிலைப் பயன்படுத்த முதல்வர் விஜய் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முதலமைச்சர் விஜய்,உலண்டன் பயணத்தின்போது,வாயில் எண்:6 ஐ பயன்படுத்த மாட்டார்.

வழக்கமான நடைமுறைகளின்படி டெர்மினல் 2 பயணிகள் முனையத்திற்குச் சென்று,அதன்வழியாக விமானநிலையத்திற்குள் செல்வார் என்று,சென்னை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

சென்னை விமான நிலைய அதிகாரிகள்,பாதுகாப்பு அதிகாரிகள்,முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் அவசர அவசரமாக,முதலமைச்சரை தகுந்த பாதுகாப்புடன்,டெர்மினல் 2 வழியாக,உள்ளே அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

அதன்படி,டெர்மினல் 2 புறப்பாடு பகுதியில்,டி-9 வாயில் வழியாக,முதலமைச்சரை அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.அந்த டி-9 வாயில் அவசர காலத்திற்கு மட்டும் திறந்து உபயோகப்படுத்தப்படும். மற்றநேரங்களில் மூடப்பட்டு இருக்கும்.அதுவழியாக முதலமைச்சர் விஜய் விமானநிலையத்திற்குள் நேற்று சென்றார்.

இதனால்,டெர்மினல் 2 பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

சென்னை விமானநிலையத்திற்கு வழக்கமாக வரும் பயணிகளை நுழைவுவாசலிலேயே கடுமையாக பரிசோதித்து அதன்பின்பு உள்ளே அனுப்பிவைத்தனர். பயணிகளோடு வழியனுப்ப வருபவர்களை உள்ளே அனுப்புவது நிறுத்தப்பட்டது.

அதைப்போல் விமான நிலையத்திற்கு பணிக்கு வரும் பணியாளர்களையும் பலத்த சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதித்தனர்.இதனால் மக்களும் காவலர்களும் கடும் அவதி அடைந்தனர்.

Leave a Response