பில்லி சூனியம் நீங்க சிறப்பு பூசை – எடப்பாடி மனைவி செயலால் பரபரப்பு

அதிமுகவில் தன்னுடைய இடத்தைத் தக்க வைக்க பெரும்பாடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.தேர்தல் நெருங்க நெருங்க அவருக்கு உள்ளும் புறமும் பல எதிர்ப்புகள்.

பணத்தால் எல்லோரையும் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கலாம் என்கிற அவருடைய எண்ணம் ஈடேறாமல் போய்க் கொண்டிருக்கிறது.

அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பேரில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அண்ணாமலை ஆகியோர் அவரைச் சந்தித்துவிட்டு வந்தனர்.

அது எடப்பாடி பழனிச்சாமிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் நிகழ்வு என்று சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாத சுவாமி கோயிலில் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி சிறப்புப்பூசை செய்திருக்கிறார்.

அந்தக் கோயிலில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சுக்கிர வார வழிபாடு நடப்பது வழக்கம். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால், பில்லி சூனியம் விலகும். எதிர்ப்புகள் விலகும். சட்ட சிக்கல்கள் தீரும் என்பது ஐதிகம். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று நடந்த சட்டைநாதர் சுவாமி சுக்கிரவாத பூசையில் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி இராதா கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். கணவருக்கு சிக்கல்கள் விலகி, எதிரிகள் தொல்லைகள் நீங்கி, மீண்டும் அவர் முதலமைச்சராக வேண்டி இந்த சுக்கிரவார பூசையில் அவர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

நிலைமை கைமீறிப் போய்விட்டதால் கடைசி முயற்சியாக கோயிலைச் சரணடைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Response