மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பு – பொதுவேலை நிறுத்தம்

ஒன்றிய அரசு அமல்​படுத்​தி​யுள்ள 4 புதிய தொழிலா​ளர் சட்டத் தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் நவம்பர் 26 ஆம் தேதி நாடு தழு​விய பொது வேலை நிறுத்தப் போராட்​டம் நடை​பெறும் என தொழிற்​சங்​கங்​கள்
கூட்​டாக அறி​வித்​துள்​ளன.

இதுதொடர்​பாக ஐஎன்​டி​யுசி, ஏஐசிடி​யுசி, எச்​எம்​எஸ், சிஐடி​யு,தொமுச உள்பட 10 தொழிற்​சங்​கங்​கள் சார்​பில்
வெளி​யிடப்​பட்​டுள்ள கூட்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது….

ஏற்​கெனவே நடை​முறை​யில் இருந்த 29 தொழிலா​ளர் நலச் சட்​டங்​களை நீக்​கி​விட்டு அவற்​றுக்குப் பதிலாக புதி​தாக 4 தொழிலா​ளர் சட்டத் தொகுப்​பு​களை ஒன்றிய அரசு உரு​வாக்கி அவற்றை நவம்பர் 21 முதல் அமல்​படுத்​தி​யுள்​ளது.

தொழிலா​ளர் விரோத, முதலா​ளி​களுக்கு ஆதர​வான இந்தச் சட்​டங்​களை தன்​னிச்​சை​யாக நடை​முறைப் ​படுத்​தி​யிருப்​ப​தற்கு மத்​திய தொழிற்​சங்​கங்​களின் கூட்டு நடவடிக்​கைக்​குழு சார்​பில் கடும் கண்டனத்தைத் தெரி​வித்​துக்
​கொள்​கிறோம்.

நான்கு தொழிலா​ளர் சட்டத் தொகுப்​பு​களும் நவம்பர் 21 முதல் அமல்​படுத்​தப்​படும் என ஜனநாயக விரோத,
தன்​னிச்​சை​யான அறிவிக்​கை வெளியிட்டது, அனைத்து ஜனநாயக நெறி​முறை​களை​யும் மீறும் செயல். இது தொழிலா​ளர் நலன்​களை முற்​றி​லும் சிதைத்​துள்​ளது.

ஏற்​கெனவே உள்ள 29 தொழிலா​ளர் நலச்​சட்​டங்​களை நீக்​கி​விட்டு புதி​தாக 4 தொழிலா​ளர் சட்​டங்களை
இயற்​றும்போது தொடக்க நிலை​யிலேயே தொழிற்​சங்​கங்​களும், தொழிலா​ளர் நலக் கூட்​டமைப்​பு​களும் கடுமை​யாக எதிர்ப்பு தெரி​வித்​தன.

கடும் எதிர்ப்பு இருந்த நிலை​யில் பீகார் சட்​டப்​பேரவைத் தேர்​தல் வெற்​றியைத் தொடர்ந்து 4 தொழிலா​ளர் சட்​டத்​தொகுப்​பு​களை​யும் ஒன்றிய அரசு திடீரென அமல்​படுத்​தி​யுள்​ளது. இவை உழைக்கும் வர்க்​கத்​தினரின் நலன்​களுக்கு முற்​றி​லும் எதி​ரானவை. இந்​தச் சட்​டத்​தொகுப்​பு​களை தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரங்​களுக்கு எதி​ரான
இன ரீ​தியி​லான தாக்​குதலாகக் கருதுகிறோம்.

இவை தொழிலா​ளர்​களை அடிமை​யாக்​கு​வதுடன் அவர்​களின் உரிமை​களை முற்​றி​லும் பறிக்​கும். புதிய சட்டத் தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் தொழிற்​சங்​கங்​கள் மற்​றும் தொழில் கூட்​டமைப்​பு​கள் சார்​பில் நவம்பர் 26 ஆம் தேதி நாடு தழு​விய பொது வேலைநிறுத்தப் போராட்​டத்​துக்கு அழைப்பு விடுக்​கப்​படு​கிறது.

தொழிலா​ளர் விரோத சட்​டத் ​தொகுப்​பு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் தொழிலா​ளர்​கள் கறுப்புப் பட்டை அணிந்து பணி​யாற்ற வேண்​டும். அதோடு வரும் திங்​கட்​கிழமை முதல் வாயிற்​கூட்​டம், தெரு​முனைக் கூட்​டம் என எதிர்ப்பு நடவடிக்கைப் பணி​களில் ஈடுபட வேண்​டும். இந்த நான்கு சட்​டத்​ தொகுப்​பு​கள் திரும்பப் பெறப்​படும்​வரை உழைக்​கும் மக்​கள் வலிமை​யுடன் போ​ராடு​வார்​கள் என்ற எச்​சரிக்​கையை ஒன்றிய அரசுக்கு விடுக்​கிறோம்​.

இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response