
நவம்பர் 20 ஆம் தேதி சென்னை கொரட்டூர் பேருந்துநிலையம் அருகில் நாம்தமிழர்கட்சி சார்பாக தமிழீழதேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்தநாள்விழாக் கொண்டாட திட்டமிடப்பட்டு பல நாட்களாக அக்கட்சியினர் வேலை செய்துகொண்டிருந்தனர். விழா நடக்கின்ற நாளன்று காலையில் வருவாய்த்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் மாநகராட்சிஅதிகாரிகளும் நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்கு வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளையெல்லாம் அப்புறப்படுத்தத் தொடங்கினர்.
செய்தியறிந்து அங்கு திரண்ட நாம்தமிழர்கட்சியினர் அதற்கு எதிர்க்குரல் கொடுத்திருக்கின்றனர். இந்தஇடத்தில் பதாகை வைக்கப் பணம்கட்டி இரசீது பெற்றிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் எதும் செய்யமுடியாமல் அதிகாரிகள் அகன்றிருக்கின்றனர்.
வழக்கமாக இந்தஇடத்தில் அரசியல்கட்சிக்கூட்டங்கள் இதேபோல நடந்துகொண்டிருக்கின்றன. அப்போதெல்லாம் ஏதும் செய்யாத அதிகாரிகள் இந்தக்கூட்டத்துக்கு இப்படி நெருக்கடி கொடுக்க என்ன காரணம்? என்று விசாரித்தால், அதிமுக சட்டமன்றஉறுப்பினர் வேதாச்சலம்தான் அதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள். மண்டலத்தலைவர் தேர்தலில் அவர் பொறுப்பில் விடப்பட்ட ஏழாவதுமண்டலத்தில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. அப்போதிருந்தே கட்சியில் ஓரம்கட்டி வைக்கப்பட்டிருக்கும் அவர் எதையாவது பரபரப்பாகச் செய்து மீண்டும் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறவேண்டும் என்று திட்டமிட்டதாகச் சொல்லப்படுகிறது.
அவர் ஏற்படுத்திய தடைகளைத்தாண்டி விழா எழுச்சியுடன் நடைபெற்றது. அங்கு போடப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாறக்£லிகள் நிரம்பி வழிந்தததோடு ஆயிரக்கணக்கானோர் சாலையோரங்களில் உட்கார்ந்துª£கண்டும் நின்று கொண்டும் உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
வழக்குரைஞர் அறிவுச்செல்வன் பேசும்போது, தில்லியில் ஆட்சியைப் பிடித்தவுடன் தமிழகத்தைப் பிடிக்கத் திட்டம்போட்டுக்கொண்டிருக்கிறார் அமித்ஷா, அவருக்கும் மரியாதைக்குரிய பிரதமர் மோடிக்கும் சவால் விடுகிறேன், வாருங்கள் களமாடிப்பார்ப்போம் என்றார்.
அன்புதென்னரசு பேசும்போது, கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கிறதென்றும், ஏற்கெனவே இங்கு நடைபெற்ற ஒரு கூட்டத்தின்போது சீமான்அவர்கள் அதுபற்றிப் பேசியதால் அதைச் சுத்தம் செய்யும் வேலைகள் தொடங்கின என்றும் மறுபடி அப்படியே கிடப்பில் கிடக்கிறதென்றும் சொன்னார். கூடவே சுடுகாட்டுநிலம் பல அரசியல்கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால், அங்கு போவதற்குச் சரியான பாதையும் இல்லை, சுடுகாட்டுக்கொட்டகைக்குக் கூரையும் இல்லை எனவே இவற்றை ஒரு மாதத்துக்குள் சரி செய்யாவிட்டால், மாநகராட்சி ஏழாவதுமண்டலத்தின் முன்பாக பிணம்எரிக்கும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
சீமான் பேசத்தொடங்கியதும் கூட்டம் எங்கிருந்து வந்ததென்று தெரியாமல் அதிகரித்தது. பிரபாகரன்விழா என்பதால் அவருடைய பேச்சின் பெரும்பகுதி பிரபாகரன் பெருமைகளைப் பேசுவதாகவே அமைந்திருந்தது. எத்தனை தடைகள் வந்தாலும் எம்அண்ணனின் பெருமைகளை இந்த உலகத்துக்கு எடுத்துச்சொல்லிக்கொண்டேயிருப்போம் என்று சொன்ன சீமான், இவரைப்போல சிறந்த மாந்தநேயத்துக்காரரை இலகில் எங்கும் பார்க்கமுடியாது என்று எடுத்துக்காட்டுகளுட
ன் விவரித்தார்.
தலைவர், அண்ணன், பிரபாகரன் என்று அவரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கூட்டம் உற்சாகமாகக் கைதட்டி வரவேற்றது. பிரபாகரன் பிறந்தநாள் கூட்டங்களைத் தடுக்கவேண்டும் என்று சொல்பவர்களின் செவிட்டில் அறைவது போல அந்தக்கைதட்டல்கள் இருந்தன என்பதில் மிகையில்லை.
-செல்வன்


