மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழர்

மும்பை, கல்யாண்– டோம்பிவிலி மாநகராட்சி தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் முத்துக்கண்ணன் நாடார் என்ற தமிழர் போட்டியிடுகிறார்.

கல்யாண்– டோம்பிவிலி மாநகராட்சி தேர்தல் வருகிற 1–ந்தேதி நடக்க உள்ளது. 122 வார்டுகளை கொண்ட இந்த மாநகராட்சியில் 5 வார்டுகளை தவிர மீதமுள்ள 117 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது.

2 லட்சத்து 93 ஆயிரம் வா£க்காளர்களை கொண்ட கல்யாண்– டோம்பிவிலி மாநகராட்சியில் மொத்தம் 753 வேட்பாளர்கள் தேர்தல் களம் காண்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் டோம்பிவிலியை சேர்ந்த முத்துக்கண்ணன் நாடார்(வயது33) என்ற தமிழர் களம் இறக்கப்பட்டு உள்ளார். இவர் டோம்பிவிலி கிழக்கில் உள்ள சாவர்க்கர் ரோடு 70–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தற்போது முத்துக்கண்ணன் நாடார் அப்பகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வார்டு தலைவராக உள்ளார். அவரது தந்தை காசி நாடார் டோம்பிவிலி நாடார் சங்க துணைத் தலைவர் ஆவார்.

முத்துக்கண்ணன் நாடாருக்கு சாந்தி என்ற மனைவியும், தஸ்மி என்ற மகளும் உள்ளனர். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள அரமநேரி ஆகும்

Leave a Response