
தமிழ் மக்களது அரசியல் 2009 ஆம் ஆண்டு போர் முடிவில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொடுமையான விசாரணைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார். சிறைவாழ்வு மற்றும் புனர்வாழ்வுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் 2013 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். கொடிய புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு 18-10-2015 அன்று தமிழ்மண்ணை விட்டுப் பிரிந்துள்ளார்.
விடுதலைக்கான பயணத்தில்,1991 ஆம் ஆண்டு, தனது 19வது வயதில் தன்னை இணைத்துக் கொண்ட சிவகாமி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட தமிழினி அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கணம் வரை மக்களின் அரசியல் விடுதலைக்காகவும் பெண்கள் சிறுவர்களது பாதுகாப்பு, முன்னேற்றத்திற்காகவும் உழைத்தார். சிறந்த பண்பும், ஆளுமையும் கொண்ட தமிழினி அவர்கள் தமிழ் பெண்களின் தலைநிமிர்வுக்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களதும் உயர்வுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர்.
களத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளில் நடந்த அமைதிப்பேச்சுகளிலும் பங்கேற்றிருந்தார்.
தமிழினி அவர்களது இழப்பு தமிழ்த் தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். எமது மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்து எம்மை விட்டுப் பிரிந்துள்ள வீரப்புதல்வியின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், அவரது பிரிவுக்காக அனைத்து தமிழ் மக்களையும் ஒரு கணம் தலைசாய்க்குமாறு வேண்டுகின்றோம். மேலும் அவரது 20 ஆம் தேதி நடக்க்விருக்கும் அவரது, இறுதி வணக்க நிகழ்வுகளிலும் பங்கெடுத்து அவர் தாய் மண்ணுக்கு தனது இளமைக்காலத்தை அர்ப்பணித்து ஆற்றிய பணிக்கு கௌரமளிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம் என்று பல தரப்பினரும் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.


