எடப்பாடி பழனிச்சாமி விரக்தியாகப் பேசியது ஏன்?

சென்னை, வேளச்சேரியில் நேற்று (ஜூன் 20) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவரிடம், கொரோனா தொற்று முழுமையாக எப்போது ஒழியும்? என்று கேட்டதற்கு,

இறைவனுக்குத்தான் தெரியும். எனக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? நாம் மருத்துவர்கள் கிடையாது. படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும் என்கின்றனர். தடுக்கத்தான் முடியும், ஒழிக்க முடியாது என நிபுணர்கள் சொல்கின்றனர். முகக்கவசம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள்தான் அரசாங்கம். அரசாங்கம் எனத் தனியாக இல்லை. மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

என்று பதில் கூறினார்.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கோயில்களை மூடிவைத்த அரசு இப்போது இறைவனுக்குத்தான் தெரியும் என்று சொல்வது சரியா? என்கிற விமர்சனங்களும் வருகின்றன.

அதோடு முதல்வர் இப்படி விரக்தியாகப் பேசக் காரணம் இருக்கிறது என்று அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அண்மைக்காலமாக மத்திய அரசின் நெருக்கடி முன்னெப்போதையும் விட அதிகரித்திருப்பதால்தான் முதல்வர் இவ்வளவு விரக்தியாகப் பேசுகிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response