
சில நாட்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சி பல இடங்களில் தெரியவில்லை. இப்படி ஆகும் என்பதை உணர்ந்திருந்த அந்தத் தொலைக்காட்சி, உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள் என்று தொடர்ந்து விளம்ப்ரம் செய்து வந்தது.
ஆனாலும் அந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை அரசு கேபிள், விகே டிஜிட்டல் மற்றும் சுமங்கலி கேபிள் ஆகிய நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.
இதற்குக் காரணம், சேனலிடம் இருந்து நிகழ்ச்சிகளை வாங்கி ஒளிபரப்புகிற எம்.எஸ்.ஓக்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பான சிக்கல்தாம்.
நாங்கள் முப்பது சதவிகிதம்கிற நியாயமான ஒரு கட்டணத்தை வழங்கி வருகிறோம். அதைவிடக் கூடுதலாகக் கேட்கிறார்கள் அப்படித் தர முடியாது என்பது சேனல் தரப்பின் தகவலாக இருந்தது.
அதனால், அரசு கேபிள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒளிபரப்பை நிறுத்தினால் மக்களே அதற்கெதிராகத் திரள்வார்கள் என்று சேனல் நம்பியதாம்.
ஆனால் அந்த நிறுவனங்கள் ஒளிபரப்பை நிறுத்தியபோது அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக ஜீ தமிழுக்கு விளம்பரம் தரும் நிறுவனங்கள், இப்படிப் போனால் விளம்பரங்களை நிறுத்திவிடுவோம் என்று சொல்லிவிட்டனவாம்.
எனவே இறங்கி வந்த ஜீதமிழ் நிர்வாகம், அரசு கேபிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உரிய கட்டணம் செலுத்த ஒப்புக்கொண்டதாம். அதனால் மீண்டும் அவற்றில் ஜீதமிழ் தெரிகிறது.
