ஸ்டெர்லைட் போராட்டத்தில் தொடக்கம் முதல் இருந்தவரை குறிவைத்து சுட்டுக்கொலை – அதிர்ச்சி தகவல்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கடந்த 100 நாள்களாக பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக, ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்ப்புக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, டி.ஐ.ஜி., கபில் குமார் சாரட்கர் தலைமையில், 3 மாவட்டப் போலீஸார் தூத்துக்குடியில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். ஆனால், தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால், போலீஸாரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனிடையே, போலீஸார் தாக்கியதிலும் துப்பாக்கிச் சூட்டிலும் பொதுமக்களில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கியதில் காவல் துறையினரும் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர். ஒருவரின் பெயர் அந்தோணி என்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களின் விவரம் தெரியவில்லை.

இது குறித்து தற்சார்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கி.வே.பொன்னையன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்த தோழர் தரும் அதிகாரப்பூர்வத் தகவல்.
துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தவர்களில் ஒருவர்
புரட்சிகர இளைஞர் முன்னணியின் முன்னணி செயல்வீரர் தோழர். தமிழரசன் என்பவர் இவருக்கு வயது சுமார்50 இருக்கும்.
தோழர் தமிழரசனின் இயற்பெயர் மாரிச்சாமி.இவர் தூத்துக்குடிக்கு முன்புள்ள குறுக்குச்சாலைப் பகுதியைச் சார்ந்தவர்.
ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்டதிலிருந்து புரட்சிகர இளைஞர் முன்னணி நடத்தி வரும் போராட்டங்களில் முன்னணியிலிருந்து செயல்பட்டு வருபவர்.
தூத்துக்குடி மக்கள் போராட்டத்திலும் தோழர் தமிழரசன் முன்னணியிலிருந்து ஓயாமல் செயல்பட்டுவந்துள்ளார்.
உளவுத்துறை திட்டமிட்டே தோழர் தமிழரசன் அவர்களை குறிவைத்துத் தாக்கியதாக உடனிருந்த தோழர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவில்லை என தூத்துக்குடியிலுள்ள தோழர்கள் தெரிவிக்கின்றனர்.
தோழர் தமிழரசனோடு நானும் சில காலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றிருந்தேன்.
புரட்சிகர இளைஞர் முன்னணியின் நீண்ட கால செயல்பாட்டில் பன்னாட்டு நிறுவனத்தை விரட்டியடிக்க களப்பலியானவர் தோழர் தமிழரசன் ஆகும்.
தனக்காக வாழ்ந்தவர் மரணம் இறகை விட லேசானது.
மக்களுக்காக மடிந்தவர் மரணம் மலையை விடக் கனமானது!

தூத்துக்குடி போராளிகள் அனைவருக்கும் வீரவணக்கம் செய்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response