
இயக்குநர் மு.களஞ்சியத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆதி திரைக்களத்தின் வலைத்தளத்தை இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கி வைத்தார். ஆதி திரைக்களத்தின் முதல் படைப்பு “முந்திரிக்காடு”…
ஆகவே, ஆதி திரைக்களம் வலைத்தளத்தில் “முந்திரிக்காடு” திரைப்படம் குறித்த செய்திகளும், படத்தின் முக்கியமான புகைப்படங்களும், காணொளிப்பதிவுகளும் பதிவிடப்பட்டுள்ளது
இந்தப் படத்தில் இயக்குநர் சீமான் காவல்துறை அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


