
சாட்டை உட்பட சிலபடங்களில் நாயகனாக நடித்திருக்கும் யுவனும், பசங்கபடபுகழ் ஸ்ரீராமும் நாயகர்களாக நடிக்கும் படம் கமர்கட்டு. கலைஇயக்குநராக இருந்து இயக்குநராகியிருக்கும் ராம்கிராமகிருஷ்ணன் எழுதி இயக்குகிறார். இந்தப்படத்தில் நாயகிகளும் இரண்டுபேர் இருக்கிறார்கள். ரக் ஷா, மனிஷாஜித் ஆகிய இருவர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களில் யுவனுக்கு ரக்ஷிதாவும் ஸ்ரீராமுக்கு மனிஷாஜித்தும் ஜோடி. இவர்களுக்குப் பள்ளியில் படிக்கிற போதே காதல் வருகிறது. அந்தக்காதல் கல்லூரிவரை வளர்கிறது. வழக்கம்போல அதற்குச் சிக்கல். அந்த நேரத்தில் ஒரு சித்தர் இவர்களுடைய காதலுக்கு உதவுகிறாராம். கமர்கட்டு என்கிற தின்பண்டத்தின் வடிவிலேயே ருத்திராட்சக்கொட்டையும் இருக்கும். சிறுவர்களுக்குப் பிடித்தமான கமர்கட்டுக்கும் சித்தர்களுக்குப் பிடித்த ருத்திராட்சக்கொட்டைக்கும் இந்தப்படத்தில் தொடர்பு உள்ளதாம். அதனாலேயே இந்தப்பெயரை வைத்ததாகக் கூறுகிறார் இயக்குநர்.
பள்ளிமாணவர்கள் காதலிப்பது போலப் படமெடுப்பதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன நீங்களும் அதேபோலக் காட்சிகள் வைத்திருக்கிறீர்களே என்று இயக்குநரிடம் கேட்டால், பள்ளியில் படிக்கும்போது அவர்கள் நண்பர்கள்தாம், பள்ளிச்சீருடையில் அவர்கள் நட்பாக இருப்பது அரட்டைஅடிப்பது போன்ற காட்சிகள்தாம் இருக்கும் என்று சொல்கிறார். திருவண்ணமலையில் படமாக்கப்பட்டுள்ள இந்தப்படத்துக்கு ஆர்.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பைசல் என்பவருடைய இசையில் எல்லாப்பாடல்களையும் இயக்குநர் ராம்கிராமகிருஷ்ணனே எழுதியிருக்கிறார்.
