ஓவியா ரசிகர்கள் சக்தியை விரட்டியடித்தனரா? என்ன நடக்குது இங்கே?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் நடிகர் சக்தி வெளியேற்றப்பட்டார். அவர் வெளியே வரும்போது தனக்கு ரசிகர்களின் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ரசிகர்கள் இவரைக் கண்டு கொள்ளவில்லை. அதற்கு நேர்மாறாக கமல், ஓவியா பெயரைச் சொல்லும்போதெல்லாம் எழுந்த கரவொலியைப் பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்துதான் போனார்.

இந்த நிலையில் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த ஒரு விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக நேற்று சக்தி சென்றுள்ளார்.

அப்போது அங்கு ஓவியாவின் ரசிகர்கள் சக்தியைச் சூழ்ந்து கொண்டனர். ஓவியா ரசிகர்கள் சேரச் சேர கூட்டம் அதிகமாகி கூச்சல் எழுந்து விளம்பரப்படப் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

மேலும் சக்தியிடம் ஓவியா ரசிகர்கள், ஓவியாவை ஏன் அடிக்கப் போனீர்கள்?. அவரை ஏன் தனிமைப்படுத்தினீர்கள்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இதில் ஆடிப்போன சக்தி அந்த இடத்தில் இருந்து வெளியேறி காரில் ஏறிப் புறப்பட்டுள்ளார். ஆனாலும் விடாமல் பைக்கில் துரத்திச் சென்றுள்ள ஓவியா ரசிகர்களிடமிருந்து சக்தி தப்பிசென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி நடக்க வாய்ப்பில்லை என்று திடமாக மறுக்க முடியாத நிலையில்தான் நாடு இருக்கிறது.

Leave a Response