
பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே சக்தி தன்னை ஆண் நாட்டாமையாகவும், காயத்ரி தன்னை பெண் நாட்டாமையாகவும் நினைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.. அதிலும் அதிகமாக கெட்ட வார்த்தைகள் பேசுவதாக காயத்ரியின் தவறை கமல் பலமுறை சுட்டிக்காட்டியும் காயத்ரி திருந்துவதாக இல்லை.. கமல் யார் எனக்கு அறிவுரை சொல்ல என எகிறுகிறார் காயத்ரி.
இந்தநிலையில் காயத்ரியின் சித்தியும் பிரபல நடன இயக்குனருமான கலா மாஸ்டர் காயத்ரி குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“காயத்ரியைப் பொறுத்தவரைக்கும் அவளை நான் குழந்தையிலேயிருந்தே பார்த்துட்டு வர்றேன். பொதுவா காயத்ரி கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனதிலிருந்து அவளோட இன்னொரு முகத்தைப் பார்க்கிறேன். அவ பண்றது எல்லாம் தப்பு மேல தப்பா இருக்கு… சரி, நேர்ல வந்ததும் பேசிக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.
ஆனா, நேத்தைய எபிசோட்ல அவ தப்பா பேசின வார்த்தை பத்தி கமல் சார் கேட்கிறார். அப்பவும் அவ அதைத் தப்பில்லைன்னு சொல்றா. அம்மா அப்பாவே தப்பு பண்ணினாலும், தப்பு தப்புதான். அதுவும் வயதிலும், நடிப்பிலும் பெரியவரான கமல் கேட்கிறப்ப காயத்ரி அப்படி ரியாக்ட் பண்ணினது சுத்தமா பிடிக்கலை” என்கிற கலா மாஸ்டர், காயத்ரி தன்னை மாற்றிக்கொள்ளாவிட்டால் அவர் வீட்டிற்கு வந்தபின் அவருடன் பேசப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.


