மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தாரா ஓவியா?

ஓவியா நேற்று தற்கொலை முயற்சி செய்ததாக பலரும் கூறினார்கள். ஆனால், அப்படியெல்லாம் இல்லை, அவருக்கு மன அழுத்தம் அதனால் தான் சிகிச்சை வழங்கப்பட்டது என்று கூறினார்கள்.

ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ஓவியாபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைதான், மீண்டும் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறதாம்.

இந்நிலையில் இன்று வந்த ப்ரோமோவில் அனைவரும் அழுவது போல் காட்டியுள்ளனர், கமலும், தன் பங்கிற்கு உண்மையை கூறும் தருணம் என்று கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து கமல் இன்று வரும் எபிசோடில் ஓவியாவை நேரில் அழைத்து பேசியுள்ளார், அவர் தனக்கான பிரச்சனைகளையும் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் இன்று பங்கேற்கும் நிகழ்ச்சியில் இதுக்குறித்து பேசுவார் என தெரிகின்றது.

இதுமட்டுமின்றி ஓவியாவின் பிரச்சனை என்ன, ஆரவ் உண்மையாகவே காதலித்தாரா? என்பது குறித்தும் இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Response