
மாயக் குழல் கண்டோம்!
தமிழ் இசையால் ஒன்று படுவோம் எனும் முழக்கத்தை முன் வைத்து,
மகுடம்- தமிழர் வல்லிசை அமைப்பு தன் பணிகளை பெரும் முனைப்புடன் தொடங்கி உள்ளது.
தமிழிசைக்கு மேடை மறுக்கும், ஆரிய பார்ப்பனர் அமைப்புகளுக்கு சவால் விடும் வகையில்
தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் அய்யா நா.அருணாசலம்அவர்கள்
தந்தைபெரியார் தமிழிசை மன்றம்அமைத்து தமிழிசையின் புகழ்விளங்கத் தொண்டாற்றினார்கள்.
அவரது அடியொட்டி, ஆனா ரூனா அவர்கள்மகன் தோழர் சௌரிராசன், தமிழர்களின் தேசிய இசைக் குழு ஒன்றை ‘மகுடம்’- தமிழர்வல்லிசை எனும் பெயரால் நிறுவி,
தமிழ்இசைக் கருவிகளின் அணிவகுப்பை
எதிர்வரும் மார்ச்சு-12 ஆம் நாள்-ஞாயிறு அன்று மாலை 05.30மணி அளவில், சென்னை காமராஜர் அரங்கில் நடத்துவதற்கானபணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன.
இந்நிகழ்வில், முரசு,பறை,தாரை,தப்பட்டை
முதல் கொம்பு,குழல், எக்காளம் உள்ளிட்ட 50-இக்கும் மேற்பட்ட தமிழிசைக் கருவிகள்,
நூற்றுக்கணக்கான கலைஞர்கள், தமிழகம்இதுவரை கண்டிராத வகையில் பங்கேற்று
நம் இசைப் பெருமையைப் பறை சாற்றிட உள்ளனர். இதில்,அழிந்து வரும் தமிழிசைக் கருவி
ஒன்றை மீட்டெடுக்கும் தேடலில் நாம் ஈடுபட்டபோது,
அண்ணன் கொளத்தூர் மணி
அவர்கள் மூலமாக,சேலம், நீதிபுரம்,மாதேஸ்வரன்
மலைப் பகுதியில், மலை வாழ் மக்கள் இசைத்து வரும் ‘மாயக்குழல்’ பற்றி அறிந்து,
அடையாளம் காணப்பட்டுள்ளது.
மகுடி என இம்மக்கள் வழங்கும் பெயர்கொண்ட இந்த மாயக்குழல் பாம்பாட்டிகள்வைத்துள்ள மகுடி எனப் பொருள் படாது.
இது ஐந்தடி வரையிலான நீளம் கொண்ட புல்லாங்குழல் போன்ற தோற்றமும், குழலின் நடுப்பகுதியில் திறப்பும் கொண்டுவிளங்குகிறது.
தற்போது இரண்டு பேரிடம் மட்டுமே உள்ள இந்த மாயக்குழல்-
லம்பாணி மலை மக்களின் சொத்தாக-நீண்ட நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
மலை மக்களின் வழி பாட்டிலும், அழும்குழந்தைகளை அமைதிப் படுத்திடவும், கோகுலத்து ஆநிறை மேய்ப்பர்கள் போல்,
மலைவாழ் மக்கள் பயன் படுத்தி வந்துள்ளனர்.
இதன் இசையை நுகரும் போது மனதை மயக்கி, ஆழ்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் ‘சுகானுபவம்’ அனுபவித்து உணரத் தக்கதாகும்.
திரு.இராஜு அவர்கள் இதனை செம்மையாக இசைத்து, இன்பம்’அருளினார் என்றே சொல்லலாம்.
சந்தன வீரப்பன் அவர்கள், இராஜ்குமாரை கடத்தி வைத்திருந்தபோது, தூக்கம் வராமல்தவித்த அவரை, தூங்க வைக்க- வீரப்பன் இந்த மாயக்குழலை இசைத்தார் எனஅறிந்தோம்.
இவ்வாறான, தமிழர் தொல் இசைக் கருவிகள் உலகிற்கு அடையாளம்
காட்டப்பட –
தமிழ் இசையால் தமிழர் நாம்
ஒன்றுபட அழைக்கிறது ‘மகுடம்’-தமிழர் வல்லிசைக் குழு.
இருக்கையை உறுதி செய்ய- முன் பதிவு செய்வீர்! அனுமதி
இலவசம்!அனைவரும் வாரீர் தமிழர்களே!!
பதிவிற்கு; 9087 35 65 97—-9087 97 94 31
மகுடம், 26, சர்தார் படேல் சாலை அடையாறு, சென்னை-600 020.
ஓ.சுந்தரம்.


