கார்த்திக் நடிக்க மறுத்த வேடத்தில் நெப்போலியன்

1991ம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின் கதாநாயகன், வில்லன்,குணசித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரத்திரங்களிலும்  நடித்தவர் நெப்போலியன்

நடிகர், சிந்தனையாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட நெப்போலியன் சில காலம் தீவர அரசியலில் ஈடுபட்ட பின்னர் தற்போது தனது இயல்பான கலையான நடிப்பில் மீண்டும் முழுகவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் வல்லவனுக்கு வல்லவன், சசிகுமார் தயாரித்து நடிக்கும் கிடாரி, குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரிக்க ராஜதுரை இயக்கத்தில் உருவாகி வரும் முத்துராமலிங்கம் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராய் பணியாற்றிய நரசிம்மராவ் இயக்கத்தில் ஜெயபிரதாவுடன் சரபா (தெலுங்கு) உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவற்றில் நடிகர் கார்த்திக் மகன் கெளதம்கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் முத்துராமலிங்கம் படத்தில் நாயகனின் தந்தை வேடத்தில் நிஜ அப்பா கார்த்திக்கே நடிப்பதாக இருந்தது. படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் அந்த வாய்ப்பு நெப்போலியனுக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

 

 

 

Leave a Response