நாடே கொந்தளிக்கும் நீட் சிக்கல் – வாய் திறந்த பிரதமர்

நீட் வினாத்தாள் கசிவு சிக்கல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.கரப்பான் பூச்சி சனதாக் கட்சியினரின் போராட்டம் ஒன்றியம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.நாடே கொந்தளிப்பான சூழலில் இருக்கிறது.இவ்வளவு நடந்தும் ஒன்றிய அரசும் பிரதமர் மோடியும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எல்லோராலும் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட மூன்று நிமிட காணொலி ஒன்றை வெளியிட்டார் பிரதமர் மோடி.அதில் அவர் பேசியிருப்பதாவது….

வினாத்தாள் கசிவு என்பது ஒரு சிறிய விசயம் அல்ல. இது இலட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.நமது முதன்மைப் பொறுப்பு மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை வீணடிக்கக் கூடாது என்பதே ஆகும்.

அதனால்தான் 22 இலட்சம் மாணவர்களுக்கான மறுதேர்வை மிகக் குறைந்த காலத்தில் நடத்தி,கடந்த ஜூலை 19 அன்று முடிவுகளையும் வெளியிட்டோம்.இத்தவறில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும்,நாம் இத்துடன் திருப்தியடைந்து விடக்கூடாது.எனவேதான் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

இந்த வரைவுச் சட்டம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெறவுள்ளது.வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் விரைவாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Response