
2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் மார்ச் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. சார்லி, நிண்டே மொய்தீன் ஆகிய படங்கள் அதிக விருதுகளைப் பெற்றுள்ளன.
சார்லி படத்தின் கலை இயக்குநராகப் பணியாற்றிய தமிழ்ப் பெண் ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன், சிறந்த கலை இயக்கத்துக்கான விருதைப் பெற்றுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இவர், மிஷ்கினின் பிசாசு படத்தில் பணியாற்றியுள்ளார். பாலிவுட்டில் கலை இயக்கம் தொடர்பான பயிற்சிகளைப் பெற்றுள்ளார். சார்லி, நீனா, டபுள் பேரல் போன்ற படங்களில் பணியாற்றி குறுகிய காலத்தில் மலையாளத் திரையுலகில் கவனம் பெற்றுள்ளார்.
விருது பற்றி அவர் கூறும்போது, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மகிழ்ச்சியை விடவும் நன்றி உணர்வுதான் உள்ளது. இது என் முதல் விருது. அதுவும் மாநில விருது! தேர்வுக்குழுவுக்கு நன்றி. கேரளாவுக்கும் நன்றி. என்னுடைய பணிகளை ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி. என் பெற்றோர், சிறந்த நண்பர்கள், என் சகோதரர், என் உதவியாளர்கள், மேஸ்திரி, தச்சர் என அனைவருக்கும் நன்றி. சார்லி குழு, நாம் சாதித்துக்காட்டியுள்ளோம். 8 விருதுகள்! என்று அவர் மகிழ்ச்சியுடன் முகநூலில் தன் கருத்துகளைப் பதிந்துள்ளார்


