
பிக்பாஸ். அடப் போங்கையா
இப்போதிருப்பதில் எதுவும் தேறாது.
வாயில் போண்டாவுடன் ஙொணஙொணத்துக்கொண்டிருக்கும் காஜல் மரண கடி.
அனெம்ப்ளாய்ட் ஆனதில் முழுநேர அழுக்காச்சியாகிவிட்ட சினேகன்.
பொறணி பொய்யாபுரி சினிமாவைப் போல இங்கேயும் தூள் பக்கோடா.
நெட்டைக் கொக்கு நியாயஸ்த முட்டைத் திருடன் கணேஷ் முழுநேர யோக ஜடம்.
பொத்திக்கொண்டு இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அம்மணமாகிவிட்ட ஆரவ்.
சகிக்க முடியாத ஜவ்வு சுஜா.
செட் பிராப்பர்ட்டி பிந்து.
திருவிழாவில் தொலைந்து போன சின்னப்பையன் பரணி.
படம் தொடங்கும் வெறியில் ஒவராய் படம் காட்டித் திரியப் போகிற ஆர்த்தி.
ஆரவ் ஆகிவிடாதிருக்க ஜாக்கிரதையாய் அளந்து அடியெடுத்து வைத்தபடி ஆரவ்வுடனிருக்கும் ஹரிஷ்.
அக்கினி ஓவியா போன பின்பு அணைந்த கரிக்கட்டைகளை எப்படியாவது மூட்டிவிட்டு நம்மைக் குளிர் காய வைக்க அன்றாடம் ஆவி போக முக்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ்.
அடப் போங்கையா


