பல கோடி பாக்கி நடிகர் விமல் மீது புகார் – மதுவால் சீரழிந்தாரா?

பசங்க படத்தில் அறிமுகமாகி ‘களவாணி’, ‘கலகலப்பு’,’மஞ்சப்பை ‘,’கேடி பில்லா கில்லாடி ரங்கா’என பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விமல்.

அதனைத் தொடர்ந்து, இஷ்டம், அஞ்சல,புலிவால், என வரிசையாகத் தோல்விப்படங்கள்.

தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் மதுவுக்கு அடிமையாகி பகலிலேயே குடித்து விட்டுப படப்பிடிப்புக்கு வரத்தொடங்கியதால் இவரை வைத்துப் படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் நெருக்கடிக்கு உள்ளானார்கள்.

இதன் காரணமாக விமல் நாயகனாக நடிக்கும் படங்களைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை புதிய பட வாய்ப்புகள் இன்றி வீட்டில் முடங்கினார் விமல்.

அதனால் வீழ்ந்து போன தன் சினிமா மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவதற்காக “மன்னர் வகையறா” என்ற படத்தை தானே சொந்தமாகத் தயாரித்தார்.

அந்த படத்தின் பட்ஜெட் எகிறியதால் பெரும் கடன் சுமைக்கு ஆளான விமல், பட விநியோகஸ்தர்களிடம் பெரும் தொகையை அட்வான்ஸாகவும், கடனாகவும் வாங்கி படத்தை வெளியிட்டார்.

ஒரு வருடத்திற்குள் ஆறு படங்களில் நடித்து மொத்தக் கடனையும் அடைத்து விடுவதாக உறுதி கூறியதால் முன்பணம் கொடுத்த விநியோகஸ்தர்கள் மன்னர் வகையறா படத்துக்கு வாங்கிய முன்தொகையை உடனடியாககேட்காமல் பொறுமை காத்தனர்.

கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக பத்துக்கும் மேற்பட்டபடங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய விமல் கடன் கொடுக்க வேண்டியவர்களுக்கு குறைந்தபட்ச தொகையைக் கூடக் கொடுக்கவில்லையாம்.

இன்றுவரை மன்னர் வகையறா படத்துக்காகப் பெற்ற முன்பணத்தை செட்டில் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின் சமீபத்தில் வெளியான ‘கன்னிராசி’ படம் தமிழகம் முழுவதும் ரூ.23 இலட்சம் மட்டுமே வசூல் செய்ததாம்

படத்தைத் திரையிட க்யூப் நிறுவனத்திற்கு கட்டிய பணம் இதைக்காட்டிலும் அதிகம். இந்நிலையில், புதிய தயாரிப்பாளர்கள் தன்னைத்தேடி வராததால், தன் சம்பளத்தை ரூ.50 இலட்சத்திலிருந்து ரூ.25 இலட்சமாக்க் குறைத்து கொண்டு ‘ குலசாமி ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனைக் கேள்விப்பட்ட மன்னர் வகையறா பட வெளியீட்டுக்கு அதிகப்பணம் கொடுத்தவிநியோகஸ்தர்கள், கடன் கொடுத்தவர்கள்இனிமேலும் பொறுமை காத்தால் பணம் கைக்கு வராது என உணர்ந்து, தாங்கள் சார்த்திருக்கின்ற விநியோகஸ்தர்கள் சங்கங்களில் புகார் கொடுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத்தில் கோவை, சென்னை, திருச்சி பகுதிவிநியோகஸ்தர்கள் தங்களுக்கு விமல் தர வேண்டிய ரூ.3.5 கோடியை வசூலித்துத் தருமாறு புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக விமல் நடித்து முடித்துள்ள, நடித்து கொண்டிருக்கும் படங்களின் வியாபாரங்கள் கேள்விக்குள்ளாகியுள்ளது என்கிறார்கள்.

புதிய படங்களில் விமலை நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

மது நாட்டுக்கு மட்டுமல்ல நடிகருக்கும் கேடு தரும் என்று தெரிகிறது.

Leave a Response