செத்தவன சொல்றியே சுட்டவன சொன்னியா ? – ரஜினியை கிழித்த ஜெகத்

போராட்டம் நடத்தினால்..தமிழகம் சுடுகாடாகும் – ” சிஸ்டம் ”

ஆமாய்யா! …ஒனக்கு ..போஸ்டர் ஓட்டுனாத்தான் ..தமிழகம்
பூக்காடாகும்! …இல்லே?

மக்களை பாத்து போராட கூடாதுன்னு சொல்றியே!..அப்புறம்
என்னா கூந்தலுக்கு..போருக்கு வாங்கன்னு ..நீயி கூப்புடுறே?
செத்தவனை பாத்து …போராடாதேன்னு சொல்றியே!
சுட்டவனை பாத்து …கொல்லாதேன்னு சொன்னியா?

யூனிபார்ம்ல இருக்கவங்களை தொடக்கூடாது தப்புங்கிறியே!
நீ ..மட்டும் சினிமாவுல ..யூனிபார்ம்ல ..இருக்குறவங்களை …
ஒதைப்பே..அடிப்பே..அசிங்கமா பேசவே..அல்டாப்பு காட்டுவே
பொரட்டி எடுப்பே ..பன்ச் டயலாக் ..உடுவே ..அப்டித்தானே?
ஏன் ..யோக்கியரே! ..யூனிபார்ம்ல இருக்குறவங்க ..கொலை
பண்ணக்கூடாது கொள்ளை அடிக்ககூடாது கற்பழிக்ககூடாது
லஞ்சம் வாங்ககூடாதுன்னு ..ஒரு வார்த்தை சொன்னியா?
கோர்ட்டுல ..எத்தனை வழக்கு ..இருக்குதுன்னு ..தெரியுமா?

ஒனக்கு ..போராட்டம்ன்னாலும் ..என்னான்னு தெரியல!
பொதுமக்கள் ..பிரச்சனைகள் ..என்னான்னும் ..தெரியல!

ஏன்யா போராட்டம்ன்னா என்னா..கறுப்புப்பணம்..ஸ்டுடியோ
மேக் அப் ..ஹீரோயின்..லைட்ஸ் ஆன்..லைட்ஸ் ஆப்..ரிலீஸ்
இமயமலை..பாபா..தியானம்..மறுபடி படம்ன்னு நெனச்சியா?

அது ..அணுஉலை ..மீத்தேன் ..நியூட்ரினோ ..நெடுவாசல் ..
ஸ்டெர்லைட் .. லைப் ஆன் ..லைப் ஆப்..ன்னு வாழறதுக்கான
வாழ்க்கை ..உயிர் போராட்டம்ய்யா ..புரிஞ்சிகிட்டு வாய தெற
அந்த மக்களுக்கு ..அட்வைஸ் பண்ண ..ஒனக்கு என்னாய்யா
தகுதி இருக்குது? ..கூச்சமா இல்லே?

சொந்த பொண்ணுங்க கல்யாணத்துக்கே ..ஒன் ..ரசிகனுக்கே
ஒரு வாய் சோறு போடாத ..ஒழுங்கன் நீயி! ..இதுல ஊருக்கு
கழட்ட வந்துட்டாரு. இப்பவே ஒன் ரசிகங்கள்ளாம் தாத்தாவா
ஆயிட்டாங்க! ..இன்னும் கட்சி பேரைக்கூட அறிவிக்க மாட்ற!
மொதல்ல ..அந்த ஆணியை …..அப்புறம் ..மத்த ???????

– ஜெகத் கஸ்பர்

Leave a Response