‘காற்று வெளியிடை’ படத்தில் ரசிகர்கள் எதிர்பாராத ஆச்சர்யம் காத்திருக்கு…!


மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இந்தப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்தப்படத்திற்கு காற்று வெளியிடை என, பெயர் சூட்டப்பட்டதுமே, பக்கா காதல் படமாகத்தான் இருக்கும் என, மணிரத்னம் ரசிகர்கள் பலரும் நினைத்திருந்தனர். ஆனால், சமீபத்தில் வெளியான அந்த படத்தில் டிரெயிலரை பார்த்தவர்கள், ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

ராணுவம், விமானம், வெடிகுண்டு என செமத்தியான ஆக்ஷன் படங்களுக்கான அடையாளம் அதில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும், மணிரத்னம் படங்களுக்கே உரிய, அழகிய காதல் காட்சிகளும் டிரெயிலரில் உள்ளன. மொத்தத்தில் இந்த படம், ஆக்ஷனும், மோதலும் கலந்த விருந்தாக இருக்கும்’ என்றே தெரிகிறது.

Leave a Response