பெண் விடுதலையைச் சரியாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் – நடிகை கஸ்தூரி பேட்டி

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். இந்த அமைப்பு மூலம் அரசிடம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனிநீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி மகளிர் தினத்தையொட்டி நேற்று (மார்ச் 8) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை கையெழுத்து இயக்கம் நடந்தது.

அதில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி,’பெண் விடுதலையை அதன் சரியான அர்த்தத்தில் முன்னெடுத்த ஒரே தலைவர் பிரபாகரன்தான்’ என்று பேட்டி கொடுத்தார்.

ஈழப் போராட்டத்திற்கு அப்பால் திரைத்துறையில் பயணித்த ஒரு பெண்ணிடம் தலைவர் பிரபாகரன் ‘பெண் விடுதலை’ சார்ந்து
அதன் சரியான அர்த்தத்தில் போய்ச் சேர்ந்திருக்கிறார் என்பது அதன் மூலம் தெரிகிறது.

தலைவர் பிரபாகரன் உலக வரலாற்றில் பெண் விடுதலையின் நவீன முன்னோடியாக நினைவு கொள்ளப்படுவார் என்று ஏற்கெனவே சொல்லப்பட்டு வந்த கூற்றுக்கு வலுச்சேர்க்கிறது இந்தப் பேட்டி.

அந்த காணொலிப் பேட்டியைக் காண…

https://www.youtube.com/watch?v=uG8cAQBXj-Y&feature=youtu.be

Leave a Response