
தமிழர்களின் வீரவிளையாட்டும், ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் அடையாளமாகவும் பன்னெடுங்காலம் தொட்டுத் தமிழர் வாழ்வியலோடு ஒன்றிணைந்து வருவது இந்த ஏறுதழுவல். தமிழனின் நாகரீகம், ஐந்திணை வாழ்வியல் ஒழுகலாறு குறிஞ்சி நிலத்தில் தோன்றி, முல்லை நிலம் வழியாக மருதநிலத்தைத் தொட்டபோது, அவனுக்கு உற்ற நண்பனாக உடனிருந்த உயிர் இந்த காளை. மனித நாகரீகம் கூடிவாழ்தலில் தொடங்குகிறது என்றும், அப்படி நதிக்கரை ஓரஙளில் கூடிவாழ்ந்தவன் தனது உணவு தேவைக்காக பயிரிட தொடங்கி, பயிரிடுவதற்கு தேவையான நிலத்தை செம்மைபடுத்த மனிதனோடு உடன் உழைத்த நண்பன் இந்த காளை.
தமிழர் வாழ்வியலை பொருத்தவரை, தமிழரின் முதல் பூமியான குமரிக்கண்டம் (லெமோரியா) தொடங்கி, அதனை தொடர்ந்து வரும் சிந்துசமவெளி நாகரீகம், ஆதிச்சநல்லூர் நாகரீக அகழ்வாய்வு இவைகளில் கிடைக்கபெரும் தொல்பொருள்கள் அடையாளங்களில் காளை பற்றியும், ஏறுழுவுதல் பற்றியும் நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கிறது. தமிழரின் புத்தாண்டான தை 1 அன்று தமிழரின் பாரம்பரியம் மிக்க, உலகத்தில் உயிர்வாழ்விற்கு உருதுணையாக இருக்கும் இயற்கைக்கு நன்றி சொல்லும் நிகழ்வே பொங்கல் விழா. பொங்கல் விழா முடிந்த பிறகு அந்த பொங்கல் வைக்க உதவும் அரிசியின் உற்பத்திக்கு உதவிய நண்பன் காளைக்கு நன்றி சொல்லும் விதமாக மாட்டிற்கு பொங்கல் வைப்பதும், அதனுடைய அடுத்த நாளான மூன்றாவது நாள் அந்த காளையை கட்டி தழுவி அதன் முன்பாக தனது வீரத்தை வெளிபடுத்துவதே இந்த ஏறுதழுவல்.
தொன்று தொட்டு வரும் இந்த தமிழரின் பாரம்பரிய நிகழ்வு, தற்போது மத்திய அரசினால் தடைசெய்யப்பட்ட நிலையில் உள்ளது. இந்த தடைக்கு அவர்கள் சொல்லும் காரணம் மிகவும் அபத்தமானது. அதாவது ”காளையை துன்புறுத்துகிறார்கள்” என்பதும் “இந்த ஜல்லிக்கட்டின் போது மனித இறப்பு ஏற்படுகிறது” என்பதும் அவர்கள் நமக்கு சொல்லும் காரணங்கள். ஆனால் இவர்கள் சொல்லும் இந்த காரணங்கள் மீது நாம் சில கேள்விகளை கேட்க தோன்றுகிறது. மாடு வதைபடுகிறது என்று நம்மிடம் காரணத்தை காட்டும் இதே மத்திய அரசு இன்று, வெளிநாடுகளுக்கு மாட்டுக்கறி ஏற்றுமதி செய்து அதில் முதலிடம் வகிக்கிறது எப்படி ?, எந்த பசுமாடும் தனது மடியில் சுரக்கின்ற பாலினை மகிழ்வோடு நமக்கு தருவதில்லை. அப்படி இருக்க இவர்கள் பசுமாட்டிடம் இருந்து பாலினை கரக்க தடைவிதிப்பார்களா ?, ஒரு வீரவிளையாடில் உயிரிழப்பு என்பது வீரத்தின் வெளிப்பாடு. அதை எப்படி தடைவிதிப்பதற்கான காரணியாக காட்ட இயலும் ?. சரி இவர்கள் வாதத்தின் படியே உயிரிழப்பு உள்ள விளையாட்டை தடை செய்யவேண்டும் எனில், ஆஸ்த்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கும் போது, அந்த பந்து பட்டு இறந்து போனார். இவர்கள் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை தடைசெய்வார்களா ? இந்தியாவில் பாதிக்கும் மேற்ப்பட்ட உயிரிழப்புகள் சாலை போக்குவருத்தில் நடைபெருகிறது. இவர்கள் போக்குவருத்தை தடைசெய்வார்களா ?
இந்த தடைக்கு உண்மையான காரணம் இதுவல்ல. உண்மையில் தமிழரின் அடையாளங்களை சிதைக்க நினைக்கும் இந்த இந்தியம், தமிழர்களின் அடையாளமாக இன்றுவரை அழிக்கப்படாமல் இருக்கும் இந்த ஜல்லிக்கட்டை அழிக்கவேண்டும் என்பதே முக்கிய காரணம். மேலும் இதில் இன்னொறு பொருளாதார முடலீடும் இருக்கிறது. அதாவது இங்குள்ள பசுக்களுக்கு சினைபிடிக்க வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து பெருமளவு இந்திய பெருமுதலாளீகளால் சினைவிந்துகளை இறக்குமதி செய்கிறார்கள். அந்த விந்து இந்த மண்ணில் விற்க வேண்டும் என்றால் இந்த மண்ணில் காளைகள் இல்லாத ஒரு வெற்றிடத்தை உருவாக்க வேண்டும். ஜல்லிக்கட்டு இருக்கும்வரை எவரும் காளையினை விற்க மாட்டார்கள். எனவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதன் மூலம் காளைகளை எதற்கும் உதவாத பொருளாக மாற்றி, இறுதியில் கறிமாடுகளாக விற்கும் சூழலை இங்கு உருவாக்க திட்டமிட்டதன் வெளிப்பாடே இந்த தடை.
அரசியலாக இன்று ஜல்லிக்கட்டு நடத்தியே தீரவேண்டும் என்று சொல்லும் திமுகவின் ஸ்டாலின் அவர்கள், காங்கிரசுடன் திமுக கூட்டணியில் இருந்த காலத்தில்தான் இந்த தடைகொண்டு வரப்பட்டது என்பதை லாபகமாக மறைக்க முயல்கிறார். அதிமுக அரசை பொருத்தவரை இந்த தடைக்கு எதிராக எந்தவித ஆக்கப்பூர்வ நடவெடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசை காட்டி தப்பிக்க முயல்கிறது. மற்றைய திராவிட இயக்கங்களை பொருத்தவரை தமிழரின் இன அடையாளங்களை மீட்பில் அக்கறை காட்டாமல் இந்தமண்ணில் வந்தேறிகளின் வாழ்வியலுக்கே போராடும் என்பது கடந்தகால வரலாறு.
மேலும் மத்திய அரசு தடைய நீக்காவிட்டாலும் தமிழக முழுமைக்கும் உள்ள வீரத்தமிழர் முன்னணியினர் மற்றைய ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுடன் இணைந்து அவரவர் வாழுகின்ற பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தும் என்பதையும் இதன் மூலம் தெறிவித்துக்கொள்கிறது.
தமிழர்நாடு


