ஓவியா-காயத்ரி போல் தற்போது ரைஸா-காயத்ரி போட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு போல் பரபரப்பாக ஏதும் இல்லை. மீண்டும் ஓவியாவை அழைக்கலாமா? என்று தொலைக்காட்சி தரப்பே பேசி வருகின்றது.

இந்நிலையில் இன்று வெளிவந்த ப்ரோமோவில், காயத்ரி என்னை, என்னால் பார்த்துக்கொள்ள முடியும் என கூறினார்.

அதற்கு ரைஸா கொஞ்சம் கிண்டலாக சிரிக்க, காயத்ரி உச்சக்கட்ட கோபத்திற்கு சென்றுள்ளார், ஓவியா-காயத்ரி போல் தற்போது ரைஸா-காயத்ரி போட்டி ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் சக்தி, காயத்ரி மட்டுமே இத்தனை நாள் வரை அனைவரின் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர், இது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

ஆனால், பெரிய குடும்பத்திலிருந்து வந்துள்ளதால், அனைவரும் அவர்களை எதிர்க்க யோசிக்கின்றனர், தற்போது அதுவும் மாறிவிட்டது.

இன்று வெளிவந்த பிக்பாஸ் ப்ரோமோவில் சக்தி, காயத்ரியை மற்ற போட்டியாளர்கள் ரைஸா, சினேகன், ஆரவ் ஆகியோர் ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.

Leave a Response