ஓவியா இருக்கும்வரை இந்தக்கூட்டம் ஓவியா பக்கம்தான்

பிக்பாஸ் இன்று

ஒருவரை நேர்மையாக ஜெயிக்க முடியாது என்று தெரிந்ததும் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்குவதற்குப் பெயர் தான் எச்சைத்தனம்!

ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸின் செல்லப்பிள்ளைகள் காயத்ரியும் கணேஷும் தான். காயத்ரி அளவிற்கு கணேஷ் முட்டாள் இல்லை என்பதால் பொறுமையாக காய் நகர்த்தி இரண்டாம் இடத்தில் நிற்கிறார். ஆனால் இந்த ஓவியா ‘நான் நானாக வாழ்வேன்’ என்று சொல்லி, பெரும் ரசிகர் பட்டாளத்தைத் திரட்டியது பிக்பாஸிற்கே அதிர்ச்சி தான் என்பது நன்றாகவே புரிகிறது.

ஒருவாரமாகவே ஓவியாவை டம்மியாக்க, டல்லாக்க, எரிச்சலூட்ட, சுயமரியாதையைச் சீண்ட பல மாமா வேலைகளை பிக்பாஸ் பார்த்தாகிவிட்டது. எதிர்பார்த்த மாதிரியே ஓவியாவும் ‘என்னை விடுங்கடா டேஷுகளா’ என்று கதறியாகிவிட்டது. ஜூலியின் ரெட் கார்ப்பெட் அட்ராசிட்டியில் முரட்டுத்தனமாக பிஹேவ் பண்ணியாச்சு. ஆனாலும் இந்த ஓவியா ஆர்மி ‘தலைவி செஞ்சா கரெக்ட் தான்’ என்று சிதறாமல் நிற்கிறது.

பார்த்தார் பிக்பாஸ்..இதோ ஒன்று பிந்து மாதவியை இறக்கி விட்டார். காயூ/கணேஷ்/ஜூலியின் ஸ்லீப்பர்செல்கள் இப்போதே பிந்து வந்துவிட்டதால் ஓவியா அவ்வளவு தான் என்று பஜனையை ஆரம்பித்துவிட்டார்கள்.

பிக்பாஸும் ஸ்லீப்பர்செல்களும் மறந்தவிஷயம், ஓவியா ஆர்மி என்பது ஓவியா அழகான நடிகை என்பதற்காக சேர்ந்த கூட்டம் அல்ல. ஓவியாவின் அட்டிடியூட் பிடித்துப்போய், தான் வாழ நினைத்த வாழ்க்கையை ஒருத்தி கண் முன் வாழ்ந்துகாட்டுகிறாளே என்று தானாகச் சேர்ந்த கூட்டம். ஓவியா, ஓவியாவாக இருக்கும்வரை இந்த கூட்டம் ஓவியா பக்கம் தான் நிற்கும்.

ஆனால் இருக்க விடுவார்களா?

கமலே சொன்னது போல், பிந்து மாதவிக்கு உள்ளே உள்ள எல்லோரைப் பற்றியும் நன்றாகத் தெரியும். ஓவியாவின் ப்ளஸ்/மைனஸ்களை தெளிவாகத் தெரிந்துகொண்டு உள்ளே நுழைகிறார். ஒவியாவைப் பொறுத்தவரை, கொஞ்சம் பாசமாகப் பேசினாலே கலங்கிவிடுவார்; சுயமரியாதையைச் சீண்டினால் சீறிவிடுவார். பிந்துவை காயூ குரூப்பும் இனி தூக்கிப்பிடிக்கும். ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் ஓவியா, இன்னும் பதட்டப்படுவார்; உண்மையான ஓவியா காணாமல் போவார்.

ஏற்கனவே சொன்னது போல் ஓவியா கேரக்டரை நாசம் பண்ணும் வேலை தொடர்ந்தால், சேனல் மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

மொத்தத்தில்…

எப்போ கணேஷ்/காயூ குரூப்பினால் ஓவியாவை சமாளிக்க முடியாதுன்னு தெரிஞ்சு பளபளப்பா இன்னொரு பாப்பாவை இறக்குனீங்களோ, அப்பவே எங்க தலைவிகிட்டே தோத்துட்டீங்கடா வெண்ணைகளா!

Leave a Response