கருணைக்கொலைகளையும் கருணையில்லாக் கொலைகளையும் வைத்து ஒரு குறும்படம்


மேன் நிலை பட்டப் படிப்பை முடித்த ஜெகதீஸ் கண்ணா, தன் திறமை மற்றும் கலை ஆர்வத்தை வீணடிக்க விருப்பமின்றி, வாயுஸாஸ்த்ர என்கிற தன் நிறுவனத்துடன் சேர்த்து முழு நேர மேடை நடிகர் மற்றும் இயக்குனர் ஆனார், தன்னம்பிகை மற்றும் விடா முயற்சி காரணமாக  தற்போது கதையின் நாயகனாக திரு.தினேக்ஷ் பாபு செல்வராசு இயக்கும் ஒரு படத்தில் நடித்துமுடித்துள்ளார். இவர் முதன்முதலில் இயக்கிய “த டோர் (கதவு)“ இவருக்கு சர்வதேச மேடை நாடக போட்டியில் சிறந்த இயக்குனர் பட்டம் பெற்று தந்தது குறிப்பிட தக்கது.

இவர் இப்போது கருணைக்கொலை மற்றும் போலீஸ் என்கவுண்டர் கொலைகளை மையமாக வைத்து உளவியல் சார்ந்த திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள குறும்படம் ஒரு கப் காபி. இது இவரது முதல் குறும் படம்.இக்குறும்படம் சென்னை சர்வதேச குறும் பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது

ஜெகதீஸ் கண்ணா எழுதிய இந்த, ஒரு கப் காபி கதை, 2013ல் சென்னையில் நடந்த சர்வதேச மேடை நாடக போட்டியான “ஸார்ட் அண்ட் சுவீட் சென்னை 2013’ல்” மேடை ஏற்ற பட்டது. திரு.ரோஹினி ராவ் இயக்கினார், பல்வேறு பரிசுகள் குவித்து இரண்டாவது இடம் பிடித்தது இக்கதை.

மேடைநாடகத்துக்குக் கிடைத்த இந்த வெற்றி துணை இயக்குனராக பணி புரிந்து வைந்த ஜெகதீஸ் கண்ணாவை இதே கதையை 20 நிமிட குறும்படமாக எடுக்க வைத்திருக்கிறது. இக்குறும்படம் சென்னை சர்வதேச குறும்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது இது மற்றும் அல்லாது 9க்கும் அதிகமான நாடுகளை சென்று சேர்ந்து உள்ளது. இது வரும் 18ஆம் தேதி ரசிய கலை பண்பாடு மையத்தில் திரையிடப்படுகிறது.

ஒரு கப் காபி  குழு,

வம்சிதரன் முகுந்தன் – ஒளிப்பதிவாளர்

கிரிதரன்.எம்.கே.பி. – படதொகுப்பாளர்

பிஜான் சுராவ் – இசை அமைப்பாளர்

மணிகண்டன் – ஒலி வடிவமைப்பு

நடிகர்கள் – தீபக் ராஜன், கிரிக்ஷ் ஹரன், நபிஸ் கிஸார், மனோஜ், நவீன் செந்தினாதன், நபிஸா, சன்மதி, சிவக்குமார், குரேசன், அபினீத், ரித்விக், கிருஸ்னா

1 Comment

Leave a Response