“ அருள்நிதியுடன் நடிக்க பயமாக இருந்தது- ரம்யா நம்பீசன் பேட்டி

ஜேஎஸ்கே சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் 7சி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், இணைந்து தயாரித்துள்ள ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் முடியும் தருவாயை எட்டியுள்ளது. ஸ்ரீகிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் அருள்நிதி ஜோடியாகன் ரம்யா நம்பீசன்  நடித்து வருகிறார்.


இந்தப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து அவர் கொடுத்த பேட்டி…..

  • இந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி..?

நாலு போலிசும் நல்ல இருந்த ஊரும்’ ஒரு சிறந்த பயணமாகவும்              அனைத்தையும் கற்று கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது.                       இப்படத்தில் நான் ஒரு ஸ்கூல் டீச்சராக வருகிறேன். ‘குள்ளநரி                  கூட்டம்’ திரைப்படத்துக்கு பிறகு நன் ஒரு கிராமத்து சாயலில் ஒரு            கதாப்பாத்திரம். நான் இவ்வகையான நகைச்சுவை திரைப்படத்தில்            நடிக்க வேண்டும் என நெடு நாளாய் காத்திருந்தேன். இயக்குனர்                ஸ்ரீகிருஷ்ணா இந்த கதையை கூறும்பொழுதே எனக்கு மிகவும்                    பிடித்திருந்தது, சற்றும் யோசிக்காமல் நான் நடிக்க ஒப்பு                                  கொண்டேன்.

  • அருள்நிதியுடன் நடித்தது பற்றி…?
    அருள்நிதியுடன் நடிப்பது ஆரம்பத்தில் பயமாக இருந்தது. பெரிய சினிமா பின்புலம் கொண்ட நடிகர் எனினும், அவர் அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வார். இன்னமும் எனக்கு தமிழில் உச்சரிப்புகள் சற்று தடுமாற்றமே அத்தகைய நேரங்களில் பேருதவி புரிந்துள்ளார்.
  •  பாடல் அனுபவம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் பற்றி…?  இப்படத்தில் ‘காதல் கனிரசம்’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்பாடல் வண்ணமயமாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நான் எந்த பாடலும் பாடவில்லை. மேலும், மலையாளத்தில் இரண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். தமிழில் இசை நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம் உள்ளது. நேரம் கூடினால் கண்டிப்பாக செய்வேன். இப்படத்தில் வாய்ப்பளித்த எனது தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க கடமை பட்டுள்ளேன். இப்படம் அனைவரையும் சிரிக்க வைக்கும், முழுக்க முழுக்க குழந்தைகளுக்கு பிடிக்கும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Response