ஆபாச வசைச்சொல் பேசும் எச்.ராஜாவை புறக்கணிப்போம் – கவிதாமுரளிதரன் கோரிக்கை

பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாசகவைச் சேர்ந்த எச். ராஜா, விவசாயிகள் பிரச்சினை குறித்து கேள்வி கேட்டதற்கு உரிய பதிலை வழங்குவதற்கு வக்கற்ற நிலையில் பத்திரிகையாளர்களை தேசத் துரோகிகள் என்று சாடியிருக்கிறார். தமிழக ஊடகத்தினர் நரேந்திர மோடியை தொடர்ந்து சிறுமைப்படுத்துவதாகவும் ஆத்திரம் பொங்க கூறியிருக்கிறார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன.

பத்திரிகையாளர் கவிதாமுரளிதரன் இதுபற்றிச் சொல்லும்போது,

மிகக் கொச்சையாக, அருவருப்பாகப் பேசியிருக்கிறார் எச்.ராஜா. விவசாயிகளை ஏன் பிரதமர் பார்க்கவில்லை என்று தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு வெள்ளக்காரியை (சோனியா காந்தி) எதிர்த்து ஏன் அவங்க போராடல, நீங்க எல்லாம் மோடி எதிரிகள், தேச விரோதிகள் என்று சொல்கிறார். ஒரு நிருபரிடம் உங்க வரிப்பணத்த நான் கொடுத்திடறேன் என்று சவால் விடுகிறார்.

இவ்வளவு அற்பத்தனமும், வன்மமும் கொண்ட ஒருவரை, அதை ஊடகவியலாளர்களிடம் மிக கேவலமாக வெளிப்படுத்தும் ஒருவரை தேசியத் தலைவராக வைத்துக்கொள்வதிலிருந்தே பா.ஜ.க என்னும் கட்சியின் லட்சணம் தெரிகிறது.
ஆனால் ஊடகவியலாளர்களை கேவலமாகப் பேசுவதை இனியும் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? கேள்விகளுக்குப் பதில்களாய் ஆபாசமான வசைகளை மட்டும் கொண்டிருக்கும் ஒருவர் மீது ஏன் தொடர்ந்து ஊடக வெளிச்சம் பாய வேண்டும்?
எச்.ராஜாவை தமிழக ஊடகங்கள் புறக்கணிப்பு செய்ய வேண்டும்.

என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

Leave a Response