சிபிராஜை விட வரலட்சுமிக்குத்தான் முக்கியத்துவமாம்..!


‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தற்போது சிபிராஜை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார்.. தெலுங்கில் சூப்பர்ஹிட்டான ‘க்ஷணம்’ என்கிற படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவானாலும் கூட, அதில் இருந்து மைய இழையை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றமாதிரி கதை பின்னியிருகிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

இத்தனை நாட்களாக டைட்டில் வைக்காமலேயே தயாராகிவந்த இந்தப்படத்திற்கு இப்போது ‘சத்யா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்தாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் வரலட்சுமி தான் படத்தின் முதுகெலும்பே என்கிறார்கள் படக்குழுவினர்.. ஆம்.. இதில் அதிரடியான அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் வரலட்சுமி..

Leave a Response