அதர்வாவுக்கு பப்ளிசிட்டியில் உதவி செய்யும் ஏ.ஆர்.முருகதாஸ்..!


நடிகர் அதர்வா தயாரிப்பாளராக களமிறங்கி தயாரித்து, நடித்து வரும் படம் ‘செம போத ஆகாத’. அதர்வா நடிப்பில் ‘பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தில் அதர்வாவுடன் கதாநாயகிகளாக அனைகா மற்றும் மேற்கு வங்க நடிகை மிஷ்டி சக்ரபோதி நடிக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வருகிற 5-ஆம் தேதி வெளியிடுகிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் ‘செம போத ஆகாத’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறர். இப்படத்தில் அதர்வாவுடன் கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

Leave a Response