முதல்வர் ஜெயலலிதா ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் – தொல்.திருமாவளவன் தகவல்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதைத் தொடர்ந்து, இதுபற்றி தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார் தொல்.திருமாவளவன். இந்நிலையில் இன்று முதல்வர் சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்றார் திருமாவளவன்.

மருத்துவமனைக்குள் சென்று வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் மருத்துவமனையின் இரண்டாவது தளத்துக்குச் சென்றேன். அங்கு எவ்வித கெடுபிடியும் இல்லை. அங்கு சிகிச்சை பெறும் மற்றவர்களும் இயல்பாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. நான் அங்கிருந்த அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களைச் சந்தித்தேன். அவர்கள், அம்மா நலமுடன் இருக்கிறார் என்றும் இன்னும் ஓரிருநாட்களில் வீடு திரும்புவார் என்றும் என்னிடம் சொன்னார்கள் என்று தெரிவித்தார்.

அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள் யார் யாரைச் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு, அவர்கள் பெயர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

தொடர்ந்து பேசும்போது, முதல்வர் பூரண நலம் பெற்றுத் திரும்பவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் சார்பாக வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

Leave a Response