சரவணன் மீனாட்சி ‘கவீன்’, ரம்யா நம்பீசன் நடிக்கும் “நட்புனா என்னனு தெரியுமா”!

பிற தொழில்களில் மேன்மையான பதவியில் வகித்தாலும் சினிமாவின் மேல் உள்ள தீராத ஆசையால் தயாரிப்பாளர்களாக ஆனவர்கள் பல பேர். அப்படி தயாரிப்பாளர்களாக உருவானவர்களில் முன்னோடியாய் விளங்குபவர் “லிப்ரா புரோடக்ஷன்ஸ்” ரவீந்தர் சந்திரசேகரன்.

சுட்டகதை, நளனும் நந்தினியும் என இரு வித்தியாசமான படங்களை தயாரித்து தனது தயாரிப்பு நிறுவனத்திற்கென ஒரு முத்திரை பதித்து கொண்ட “லிப்ரா புரோடக்ஷன்ஸ்”ரவீந்தர் சந்திரசேகரன் மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றார்.

“நட்புனா என்னனு தெரியுமா” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவக்குமார் இயக்குகிறார். இவர் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

முன்று நண்பர்கள் ஒரு பெண்னை காதலிக்க விரும்புகிறார்கள், இவர்கள் மூவரில் ஒருவரான கதாநாயகன் எவ்வாறு மற்ற நண்பர்களையும் தாண்டி கதாநாயகியாய் தன் மீது காதல்வயப்பட வைக்கிறான் என்பதனை அனைத்து ரக ரசிகர்களும் குடும்பத்தோடு பார்த்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக உருவாகும் படமே “நட்புனா என்னனு தெரியுமா”.

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த கவீன் முதன்முறையாக வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்க, இப்படத்தின் நகைச்சுவைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் மொட்டை ராஜேந்திரன், இளவரசு,அழகம் பெருமாள், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க இவர்களுடன் அருண்ராஜா காமராஜ்,ராஜு, வெங்கி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – ரவீந்தர் சந்திரசேகரன்
தயாரிப்பு நிறுவனம் – லிப்ரா புரோடக்ஷன், வனிதா பிக்சர்ஸ்
இயக்கம் – சிவக்குமார்
இசை – தரண்
ஒளிப்பதிவு – யுவாராஜ்
படத்தொகுப்பு – R.நிர்மல்
கலை – மாதவன்
நடனம் – சதிஷ் கிருஷ்ணன்
லைன் புரோட்யுசர் – நாராயணன்

Leave a Response