களமிறங்கிய சீமான், கலக்கத்தில் சுப்பிரமணியசாமி

2012 ஆம் ஆண்டு, இந்து தர்ம ஆச்சார்ய சபா தலைவர் தயானந்த சரஸ்வதி சாமிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்து கோவில்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் செயல்படும் ஆலயங்களில் வழிபாடு, சொத்துகள், நிலம் உள்ளிட்டவற்றில் அறநிலையத்துறை அதிகம் தலையிடுகிறது.

ஆலயங்களில் வசூலிக்கப்படும் நிதிகள் பல்வேறு துறைகளுக்கு செலவழிக்கப்படுகின்றன. தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் செயல்படும் அறநிலையத்துறை, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் நிர்வாகத்தை அந்தந்த ஆலய நிர்வாகத்திடமே ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

2015 செப்டெம்பரில் தயானந்த சரஸ்வதி காலமானார்.

இதனால், அவர் தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த சுப்பிரமணியசாமி முன்வந்தார்.

அவருக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு ஆதரவாகவும் சீமான் தலைமையில் இயங்கும் வீரத்தமிழர் முன்னணி வழக்கில் இனாஇந்திருக்கிறது.

இதற்கு சுப்பிரமணிய சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல், வீரத்தமிழர் முன்னணியை இணை வழக்க்ராக உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இது தொடர்பாக வீரத்தமிழர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில்….

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களையும், அந்தக் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களையும், நிலங்களையும் இந்துசமய அறநிலையத்துறை என்ற துறையின் கீழ் கொண்டுவந்தது அரசு. இது தவறானது என்றபோதும் பெரும்வாரியான சொத்துக்கள் தனித்த பார்ப்பன குருமார்களிடமிருந்தும், இந்துத்துவா சாமியார்களிடம் இருந்தும் பொதுமைப்படுத்தப்பட்டது ஒருவகையில் சிறு ஆறுதல். இன்றைய சூழலிலும் சில சொத்துக்கள் பொதுமைப்படுத்தப்படாமல் தமிழர்களின் தொன்ம அடையாளங்களை அழித்தும், பெறுமதியான தமிழர் சொத்துக்களை ஆரிய பார்ப்பனர்களும், அவர்களோடு கைகோர்த்த வகையில் திராவிடர்களும் அனுபவித்து வருகின்றனர். இந்துசமய அறநிலையத்துறை என்ற பெயரை மாற்றி தமிழர் மெய்யியல் துறை என்ற தனித்த துறை ஒன்றை உருவாக்க வீரத்தமிழர் முன்னணி போராடி வருகிறது.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த தயானந்த சரஸ்வதி சாமி, “கோவில் மற்றும் ஆசிரம நிர்வாகத்தில் ஊழல் இருப்பதாகச் சந்தேகிக்கும் பட்சத்தில் அந்த நிர்வாகத்தையும், கோயிலின் சொத்துக்களையும் இந்துசமய அறநிலைய துறையின் நேரடி கண்காணிப்பில் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் சட்டப்பிரிவு மூன்றை” நீக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தார். அதாவது இந்த சட்டப்பிரிவை நீக்குவதன் மூலம் அந்தந்த கோவில்களில் பணிபுரியும் பார்ப்பனர்களுக்கும், ஆசிரமங்களின் சொத்தை அந்தந்த இந்துத்துவா சாமியார்களுக்கும் பட்டுமே உரிமையாக அறிவிக்கவேண்டும் என்று 2012 உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, எந்தக் கோயில்களும் அதன் சொத்துக்களும், பொதுவானது இல்லை, அந்தத்தந்த கோவில்களும் ஆகம விதிகளை வைத்து வேதம் ஓதுகின்ற பிராமணர்களுக்கும், தலைமைக்குருமார்களுக்கும் சொந்தமானது என்றும் அதேபோல ஆசிரமங்கள் சொத்துக்கள் அனைத்தும் அந்தந்த சாமியார்களின் கீழ் இருக்கவேண்டும் என்றும் அவற்றைப் பொதுமைப்படுத்தி கூடாது என்றும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. வழக்குத் தொடுக்கப்பட்ட தயானந்தசரஸ்வதி இறந்துவிட்ட நிலையில், வழக்கு இப்போது உச்சநீதி மன்றத்தில் நடைமுறைக்கு வர, இந்த வழக்கின் தயானந்த சரஸ்வதி தரப்பு இணைவழக்கராக சுப்ரமணியசுவாமி தனது மனுவின் மூலம் இணைந்துள்ளார்

இந்தச் சூழலில் கோவில் மற்றும் ஆசிரம சொத்துக்களை தனிநபருக்குச் சொந்தமானதாக அறிவிக்கக் கோரிய தானந்தசரஸ்வதி அவர்களின் வழக்கு எதிராக வீரத்தமிழர் முன்னணி தமிழக அரசு வழக்கோடு தன்னையும் இணைவழக்கராக இணைத்துக்கொண்டுள்ளது.

இதற்காக வீரத்தமிழர் முன்னணி 12 நியாயமான காரணங்களை முன்வைத்து இணைவழக்கராக இணைத்துள்ளது. இந்த வழக்கு 20-07-2016 விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு இணைவழக்குகள் பதிவானதால் வழக்கு விசாரணை 08-07-2016 அன்று விசாரிக்கப்படும் என்று அன்று ஒத்திவைக்கப்பட்டது.

எனவே 08.07.16 அன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, தயானந்த சரஸ்வதிக்கு ஆதரவாகத் தன்னை இணைத்துக்கொள்ளத் துடித்த சுபராமணிய சாமி அவர்கள் எதிர்தரப்பில் வீரத்தமிழர் முன்னணி இணைவழக்கராக இணைய கடும் எதிர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தார். `’வீரத்தமிழர் முன்னணி, இந்துத்துவாவிற்கு எதிரானது, சீமான் இந்துக்களை விமர்சிப்பவர், வீரத்தமிழர் முன்னணி அமைப்பு பிரபலமான அமைப்பு இல்லை” என படபடத்தனர் சுப்ரமணிய சாமி மற்றும் தயானந்த சரஸ்வதி தரப்பு வழக்கறிஞர்கள்.

சுப்ரமணியசாமியின் விண்ணப்பம் போலவே வீரத்தமிழர் முன்னணியின் இணைவழக்கு விண்ணப்பமும் உச்சநீதி மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்துத்துவாவின் வேண்டுகோளிற்கு இணங்கத் தமிழக அரசு தனது மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்தாலும் வீரத்தமிழர் முன்னணி விடாது. காலத்தில் நேரடியாக இந்துத்துவா சக்திகளை எதிர்த்து சட்டப்போராட்டத்தில் வீரத்தமிழர் முன்னணி காலத்தில் இறங்கியுள்ளது.

கட்டாயம் சட்டப்போராட்டத்தில் வீரத்தமிழர் முன்னணி வெல்லும். இந்த வழக்கு தொடர்பாக எமக்கு ஆதரவாகக் கைகோர்க்கும் கரங்களை வீரத்தமிழர் முன்னணி வரவேற்கிறது

என்று கூறப்பட்டுள்ளது.

2 Comments

  1. திராவிடம் இந்துத்துவா போன்றவற்றிற்கு வீழ்ச்சி துவங்கிவிட்டது