மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் விக்ரம்?

ரிமாநம்பி பட இயக்குநர் ஆனந்த்ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நயன்தாரா நடிக்கும் இருமுகன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இப்படம் முடிந்ததும்

திரு இயக்கும் “கருடா “ படத்தில்  விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். .  “ கருடா “ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் விக்ரம்.

ஏற்கெனவே பேசப்பட்டது போல சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்களாம். ஷங்கரின் ஐ படம் முடிந்ததும் சாமி 2 இல் விக்ரம் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.

அப்போது நடக்கவில்லை, இப்போது நடப்பது உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள்.

விக்ரம் கருடா படத்தை முடிப்பதற்குள், தற்போது இயக்கும் சிங்கம் 3 படத்தை முடித்துவிட்டு இயக்குநர் ஹரியும் தயாராகிவிடுவார் என்று சொல்கிறார்கள்.

சாமி மிகப்பெரிய வெற்றிப் படம் என்பதால் இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

அதைத் தொடர்ந்து நடிக்கவிருக்கும் அடுத்த படத்தையும் இப்போதே முடிவு செய்துவிட்டாராம். இராவணன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் விக்ரம். மணிரதனம்  காற்றுவெளியிடை படத்தை முடித்ததும் அந்தப் படம் தொடங்கும் என்கிறார்கள்.

Leave a Response